திடீரென உங்கள் முன்
உடைந்து அழும் ரோஜாவை
என்ன செய்ய போகிறீர்கள்?
"ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு என்ன ஆகப்போகிறது?
"நான் அப்பவே சொன்னேன்" என்று உங்கள்
துடிப்பற்ற மார்பை தட்டி என்ன ஆகப்போகிறது?
இப்படி செஞ்சு அப்படி சொல்லி என்று
ரோஜாவுக்கு யோசனை சொல்லித்தான் என்ன?
கொஞ்சமாய் குளிர்ந்த நீர் தெளித்து
இதழ்கள் தடவி
"ம்ம்.." கொட்டியபடி அவள் சொல்வதை கேளுங்கள்..
பல நேரங்களில் ரோஜாக்கள் தேடுவது
ஒரு சகாவைத்தான்..
குத்தி கிழிக்கும் முட்களுடைய ரோஜாக்கள்
எப்படியும் எல்லாவற்றையும் கடந்துவிடும்..