ஏதோ ஒரு கருத்தில் முரண்பட்டு
கணத்த வார்த்தைகளை பரிமாறிக்கொண்டோம்..
பின்வந்த நீண்ட நிசப்தத்தை உடைக்க
கணத்த முத்தங்களை பரிமாறிக்கொண்டோம்..
உயிர் எரிந்து உடல் உவந்து
நம்மிடையே நம்மை பரிமாறிக்கொண்டோம்..
காலையில் கவனமாய் பொறுக்கிக்கொள்ளவேண்டும்..
சிதறி கிடக்கின்ற ஆடைகளையும், முரண்பாடுகளையும்..