வன்முறைக்கான அளவுகோல்

வன்முறைக்கான அளவுகோல் மாறிக்கொண்டே இருக்கிறது 
கத்தி, துப்பக்கி, அணுகுண்டு, வைரஸ், 
கெட்ட வார்த்தை, தீய்ந்த தோசை 
என்றிருந்தது, இன்று - 
ப்ளூ டிக் அடித்தும் கிடைக்காத பதில் 
பக்கத்தில் படுத்தும் பேசாத உறவு 
சேரவும் முடியாத 
பிரியவும் முடியாத ஒரு முடை 
சோகம் மறைக்கும் சிரிப்பு 
பத்து நிமிடத்தில் தற்கொலை வரை யோசித்து 
ரீலிஸ் பார்க்க  போன் தேடும் மனம்.


என்னுள் உடைந்த மீச்சிறு அங்கம்

நான் உனக்கு தகுதியானவன் இல்லை 
என்று உணரும் நொடியில் 
நா வறண்டது 
நெஞ்சு கனத்தது 
அறை சுழன்றது 
மூச்சு விட முடியவில்லை 
என்னுள் மீச்சிறு அங்கமொன்று  செயலிழந்தது 
அது ரத்தம் சூழ் உறுப்பாக மட்டும் இருக்காது
வலி இல்லாத வேளையில்  
கண்களில் வரும் இத்தனை நீர்
உடைவது வேறெதுவோ என்பதன் அறிகுறி


Nine Seconds

I told you something that I read
"kiss for nine seconds, its good for health"
You stared blank at the ceiling
"what are you thinking" I asked
"that who can I kiss" you said.
I tried to fake attack you
you tried to fake run
we missed the nine seconds
faking around like this.
So many nine seconds.

கணவன், மனைவியை கவனித்து கொள்வதும் 
மனைவி, கணவனை கவனித்து கொள்வதும் ஒன்றல்ல..

கணவன் தன் மனைவிக்கு உதவ, 
முதலில் பாத்திரங்களை கழுவ வேண்டும் 
துணிகளை மெஷினில் போட்டு மடித்து வைக்க வேண்டும் 
குழ்நதைகளுக்கு காலையும் லஞ்ச் பாக்ஸ்சிலும் கொடுத்தனப்ப வேண்டும்..
வீட்டின் ஒவ்வுறு அறையாக கையில் எடுத்து 
ஒவ்வுறு மனிதராக கவனித்து 
சில நாட்கள் ஓடி
களைத்து 
மனைவியை பார்க்கும்போதுதான் உரைக்கும் 
இன்னும் அவளை கவனிக்கவே ஆரம்பிக்கவில்லை அவன்.

நீங்கள் சொல்லும் கொடுஞ்செயலை 
செய்தது நான் தான்.
நான் ஒப்புக்கொள்கிறேன்..
ஆனால் அதை குற்றம் என்று 
நான்  ஒத்துக்கொள்ளமாட்டேன்.

என் போராட்டங்கள் யாவும் 
உங்கள் நீதிமன்றங்களின் உடன் அல்ல..
உங்கள் நீதியின் உடனானவை..


----------------------------------------------
I am the one who committed the atrocity
you are talking about.
I admit it..
But I will not accept it as a crime.
My revolts are not with your courts..
But with your justice..