குழந்தைக்கு தெரியாமல் சாப்பிடப்படும் சாக்லைட்டுகள்
தாயிடம் எப்போதும் இருக்கும்தானே..
அந்த கள்ளத்தில் என்னையும் சேர்த்துக்கொள்..
என்னிடம் நீ வந்து போ..
கோடை பயணத்தில் பழச்சாறுக்காக நிற்பதாக
எண்ணிக்கொள்
சில்லிட வைக்கும் சில நொடிகளை ஸ்பரிசித்துவிட்டு
மீண்டும் தழலை உடுத்திக்கொள்
உண்மை மட்டும் பேசவைக்கும்
மோஸோ திரவத்தை பருகியபின்
ஆணையோ பெண்ணையோ கேட்டால்
தங்கள் ஸ்பரிசிக்க நினைக்கும்
ஒரு பெயரை சொல்லுவார்கள்..
கேட்பதற்கும் இங்கு யாருமில்லை..
மோசோவை குடிப்பதற்கும் யாருமில்லை..
நிறைவேறாத மோகமே
புழுவாக நெளிகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக