ஒரு காட்டில் பயணிக்கிறேன்
என் அறையில் அமர்ந்தபடி
சொல்லின் அதீத விருட்சத்தை
தரிசிக்கிறேன்
பேய்கள் பிரசவிக்கும்
இமை மயிர் உதிர்ந்து
அகம் நொறுக்கும்
பாவங்கள் காட்டும் வானில்
சில நட்சத்திரங்களை எண்ணுகிறேன்
தூறமாய் கேட்கும் அருவி
நம்பிக்கையின் திசையில்
சுற்றி சுற்றி வருகிறேன்
ஆதி பிழை உணர