நன்கு வளர்ந்த பதின் வயது சிறுவர்கள்
ஐந்து பேர் கூட்டமாய் நின்று
ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள்
ஒரு குதூகலமான உரையாடலை
ஐஸ்கிரீம் நடத்துகிறது.
ஐஸ்கிரீமை கோபமாய் சாப்பிட முடியுமா என்ன?
ஒருவன் திடீரென
கைப்பேசியில் புகைப்படம் எடுக்க
மற்றவர்கள் அதற்கு தயாரானார்கள்..
எடுத்த புகைப்படத்தை
மாறி மாறி பார்த்து கொண்டிருக்க்க
ஐஸ்கிரீம் துண்டு ஒன்று
தொப்பென்று தரையில் விழுந்தது..