ஒவ்வொரு துளியும் ஒரு கவிதை
நதியின் பாதையில் பல சிறுகதைகள்
முடியாத காவியமாய் கடல்..
ஒவ்வொரு பூவும் ஒரு கவிதையாயின்
எழுதப்படாதவை எத்தனை மரங்களின் கதைகள்...?
ஒவ்வொரு பார்வையும் ஒரு கவிதயாயின்
எத்தனைகோடி சிறுகதைகள் நிமிடங்களில்?
உலகமென்னும் காவியத்தை
இயக்கும் சக்தி எதுவாக இருக்கும்?
கடவுளேன்பார், அன்பென்பார் - நான் சத்தியமென்கிறேன் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக