விடுவிக்க முடியாத பொறியொன்றில் என் கால்கள்
என் கைகளை பிடித்தபடி அவள்..
"பொறியை விடுவிக்க என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கிறாள்
"யாராலும் முடியாது"
"உன் காலை வெட்டட்டுமா?"
"வேண்டாம். என் ஊணம் நம்மிருவரையும் துரத்தும்"
".."
"நீ போய்விடு"
"மாட்டேன்". அவளது கைகள் இன்னும் அழுத்தி பிடிக்கின்றன.
"மிருகங்கள் வரலாம்"
"பரவாயில்லை"
"பசி உன்னை மாய்த்துவிடும்"
"பரவாயில்லை"
"பசி உன்னை மாய்த்துவிடும்"
"பரவாயில்லை"
"இதுதான் என் முடிவு. நீ ஏன் இன்னுமிருக்கிறாய்?"
"உன் கடைசி மூச்சுவரை என் கைகள் வெப்பமளிக்கும்"
"பிறகு ?"
".."
"நீ தாராளமாக புதிதாய் தொடங்கலாம்"
"எதை ?"
"உன் வாழ்க்கையை !!"
"இந்த காதலை என்ன செய்ய?"
".."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக