அன்பை ஒரு தோட்டாவில் அடைத்து சுடுகிறேன்
"உங்கள் பாவங்களையெல்லாம் ரத்தமாய்
உங்கள் உடலே வெளியேற்றும் " என்கிறேன்..
"அப்படியானால் நாங்கள் இனி
நல்லவர்களாக இருப்போமா?" என்று கேட்கிறீர்கள்.
நான் அவசரமாய் சொல்கிறேன்
"அப்படியில்லை..
இதுவரையிலான உங்களின் பாவக்கணக்கு
நேர் செய்யப்பட்டுள்ளது..
இதன் பிறகு நீங்கள்தான் மீண்டும் அது
தொடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"
உங்கள் முகத்தில்தான் எத்தனை ஏமாற்றம்
"உங்கள் பாவங்களையெல்லாம் ரத்தமாய்
உங்கள் உடலே வெளியேற்றும் " என்கிறேன்..
"அப்படியானால் நாங்கள் இனி
நல்லவர்களாக இருப்போமா?" என்று கேட்கிறீர்கள்.
நான் அவசரமாய் சொல்கிறேன்
"அப்படியில்லை..
இதுவரையிலான உங்களின் பாவக்கணக்கு
நேர் செய்யப்பட்டுள்ளது..
இதன் பிறகு நீங்கள்தான் மீண்டும் அது
தொடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"
உங்கள் முகத்தில்தான் எத்தனை ஏமாற்றம்