திடீரென்று நீ என் முன் வந்து நின்று
புருவத்தை உயர்த்தி "எப்படி என் surprise ?" என்று கேட்கிறாய்..
நான் கண்கலங்கி அழுது ஊரையே கூட்டிவிடுகிறேன்..
நீ கோவமும் குழப்புமாய் இருக்கிறாய்..
நான் ஏன் இவ்வளவு மூர்ச்சை அடைகிறேன் என்று கேட்க்கிறாய்..
ஒரு ஆச்சரிய தருணத்தை நான் சந்தித்து எத்தனையோ நாட்களாகிவிட்டது
ஒரு முழு மெனக்கெடலை கொட்டிய அன்பை நான் கண்டு எத்தனையோ நாட்களாகிவிட்டது ..
என்னை மட்டுமே பார்த்து சிரிக்கும் கண்களை சந்தித்து எத்தனையோ நாட்களாகிவிட்டது ..
வெறுமையின் கிடங்கில் ஒரு சிறு குருவி பறந்து வருகிறது..
அதன் ரெக்கைகளின் சத்தம் அந்த அண்டமெங்கும் எதிரொலிக்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக