நித்தமும் ஒளிர்ந்திருங்கள் / Shine forever

நித்தமும் ஒளிர்ந்திருங்கள் 
அவர்கள் உங்களை சுற்றி சுற்றி வந்து 
இரவையும் பகலையும் 
அவர்களே முடிவு செய்யட்டும்.
உங்கள் ஒளியே அவர்களின் வாழ்வு.

நித்தமும் ஒளிர்ந்திருங்கள் 
உங்கள் ஒளியை பிரதிபலித்து 
அவர்கள் தங்களை உலகுக்கு காட்டிக்கொள்ளட்டும் 
உங்கள் ஒளியே அவர்களின் அடையாளம்.

நித்தமும் ஒளிர்ந்திருங்கள்
வெகு தூரத்தில் ஒரு சிறுமி நினைத்துக் கொள்ளட்டும்
நட்சத்திரம் என்பது மிதக்கும் சிறு பொட்டென்று    
உங்கள் ஒளியே அவளின் கனவு 

இது எதுவும் தெரியாமல் 
கொஞ்சமும் சலிக்காமல் 
யாருக்காகவும் இல்லாமல் 
எங்கள்  எல்லோருக்காகவும் 
நித்தமும் ஒளிர்ந்திருங்கள்


---------------------------

Shine forever
Let them come around you
and decide their
day and night 
Your light is their life.

Shine forever
Reflecting your light
Let them show themselves to the world
Your light is their identity.

Shine forever
Far far away, let a little girl think
that a star is just a tiny speck floating out there
Your light is her dream

Without knowing all of this
without getting bored for a moment
For no one in particular
But for everyone of us
Please Shine forever


குட்டி வரலாறு

குட்டி புலி 
குதித்தால் 
அம்மா புலி திட்டியது 
குட்டி புலி 
கத்தினால் 
அம்மா புலி திட்டியது 
திட்டு வாங்கி 
திட்டு வாங்கி 
குட்டி புலி வளர்ந்தது.
பெரிதாகி அது 
மூன்று குட்டிகள் ஈன்றது. 
இரண்டினை  
அதுவே 
தின்றது.

மிரண்டு போன மிச்ச குட்டி 
அடங்கி வளர்ந்தது 
அது பெரிதாகி..
ஒற்றை வெள்ளை முடியை 
மீசையிலிருந்து வெட்டியபோது 
சில பழுப்பு முடிகளும் 
உதிர்ந்தால் 
அன்றைக்கான என் சோகம் 
மயிரால் ஆனது 
கிருஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடப்படும் 
மினுக்கும் பந்துகள் 
அம்மன் கோயில் மரத்தின் தொட்டில்களை விடவும்  
கனம் குறைவானவை 


It feels so heavy 
For being taken so light 
The mistake I made
is little in my head 
It is a huge hill 
for you to cross 
That's the difference of our worlds 
Can you see my side 
And accept me from a different world 
Instead of pushing me out 
From your beautiful world



வலி என்பதையே   அறியாதவனுக்கு 
அவள்தான் அதை  காட்டி கொடுத்தாள்.
கவலைக்கு உருகொடுத்து  
அவனருகில் நிக்க வைத்து 
நட்பாக்கினாள் ..
காற்றில் பறக்கும்  இலையென இருந்தவனை 
மரத்திலிருந்து பிரியும் நொடியை 
நினைவூட்டினாள் 
அந்த நொடியை சுற்றி சுற்றி 
களிமண்ணிலிருந்து 
உரு பெற்றான்.
அதுவே அவனது புதுரத்தம்
அதுவே அவனது பிடிப்பு. 
அதன் பரிசுத்தத்தை அவன் 
உணர்ந்தே இருக்கிறான்.
வலி அல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்து 
தன்னை கண்டுகொண்டவனை 
அவன் தேடிக்கொண்டிருக்கிறான்..