சூசையை இயேசு மன்னிப்பதில் 
பெரிய விஷயம் ஒன்றுமில்லை 
கோடி மாந்தர்களில் 
ஒரு அறையும் அதன் வலியும் 
அவ்வளவு முக்கியமானதாக தெரியவில்லை 

சூசையை பாதிரியார் மன்னித்ததில் 
பெரிய விஷயம் ஒன்றுமில்லை 
மன்னிப்பதை தவிர அவருக்கு 
வேறு வழி உண்டா எனவும் தெரியவில்லால்.

சூசைக்கு அன்றிரவு வைக்கப்பட்ட தோசையில் 
கையாலாகாத மேரியின் ஆற்றாமை 
ஓரங்களில் தீய்ந்திருந்தது  
அவளிடம் மன்னிப்பு கோராமல் 
அவனால் சாப்பிட முடிந்தது..
புளிப்பும் தெரியவில்லை 
தீய்ப்பும் தெரியவில்லை.

குளிர்ந்த என் கைகள் 
வெம்மையான உன் கைகள் 
நம் கைகளுக்கு நடுவில் 
கரைகிறது 
ஒரு கட்டி

சைவம் நான் 
அசைவம் நீ 
நாம் இருவரும் சேர்ந்து சமைத்தோம் 
ஒரு சுவையான 
மாலை

போதும் போதும் - என் மனம் 
இன்னும் கொஞ்சம் - உன் குணம் 
இருவரால் மட்டுமே சாத்தியம் 
இந்த முற்றாத 
நிறைவு 



Everyone cries for one song 
Success is finding your song   
Life is hard when you did not finding the song yet
Tragedy is not knowing that such thing exist



மழையில் பெய்கிறது 
குடை வேண்டும் 

குடை இருக்கிறது 
கேட்டால் கொடுக்கலாம் 

இன்னும் செய்தி வரவில்லை 
மழை பெய்கிறது 
குடை வேண்டும் 

குடை இருக்கிறது 
வேறு வேலை இருக்கிறது, அதுதான் முக்கியம். 
குடை கேட்டால், கொடுக்கலாம் 
 
காசு பிரச்சனை 
மழை பெய்கிறது 
குடை வேண்டும் 

குடை இருக்கிறது 
இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை விட்டுவிடும் 
பின் குடை தேவைபடாது 

அவள் இனி திரும்பமாட்டாள் 
மழை பெய்கிறது 
அவனுக்கு தெரியவில்லை 
குடை வேண்டுமென்று.

ஐயோ.. அவன் ஏன் நனைந்தபடி  நிற்கிறான்.
இவன் அவனுக்கு குடையை விரித்தான்

அவனுக்கு அழுகை மேலிட்டது 
இவன் என்ன நினைப்பானோ 
நன்றி என்று மட்டும் சொன்னான் 

இவன் நினைத்தான் 
எப்படி ஒரே குடைக்குள் பேசாமல் நிற்பது
என்ன பேசுவது..