சூசையை இயேசு மன்னிப்பதில்
பெரிய விஷயம் ஒன்றுமில்லை
கோடி மாந்தர்களில்
ஒரு அறையும் அதன் வலியும்
அவ்வளவு முக்கியமானதாக தெரியவில்லை
சூசையை பாதிரியார் மன்னித்ததில்
பெரிய விஷயம் ஒன்றுமில்லை
மன்னிப்பதை தவிர அவருக்கு
வேறு வழி உண்டா எனவும் தெரியவில்லால்.
சூசைக்கு அன்றிரவு வைக்கப்பட்ட தோசையில்
கையாலாகாத மேரியின் ஆற்றாமை
ஓரங்களில் தீய்ந்திருந்தது
அவளிடம் மன்னிப்பு கோராமல்
அவனால் சாப்பிட முடிந்தது..
புளிப்பும் தெரியவில்லை
தீய்ப்பும் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக