நல்ல வேளை!
நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே
பூக்கள் வாடி வதங்கி கருகி விடுவதில்லை
காலையில் மலர்ந்திருக்கும் ரோஜா
நம் வேலைகளையெல்லாம் முடித்து வரும்போது
மாலையில் வாடியிருப்பது
எத்தனை சௌகரியமாக இருக்கிறது..
எப்பேர்பட்டது இயற்கையின் கருணை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக