தோற்றுப்போன போரிலிருந்து
ஊர் திரும்பும் கடைநிலை போர் வீரன்
உலர்ந்த பசியேறிய பயணத்தில்
தன் பொறுப்புகளை பட்டியலிட்டுக்கொள்கிறான்
தங்கள் தளபதி வீழ்ந்ததை
வீரத்தோடு சொல்லும் காட்சிகளை குறித்துக்கொண்டான்.
காயமடைந்தவர்களை தூக்கி சென்றதில் அவன்மேல் அப்பிய
ரத்த கறைகள் போதுமானதாக இருக்கிறன..
இறந்தவானின் வாளை யாருக்கும் தெரியாமல்
மாற்றியாகி விட்டது. அதிலுள்ள ரத்தமும் இவன் வீரம் சொல்லும்.
இரண்டு வீரர்களின் கடைசி சொற்களை
அவரது குடும்பங்களை கண்டுபிடித்து சேர்க்க வேண்டும்.
வீட்டுக்கு போகும் முன் கடையிலிருந்து ஒரு மிட்டாய் பொட்டலம்
கண்டிப்பாக வாங்க வேண்டும்.