பனி பொழியும் குளிர்ந்த மாலையில்
சாலையோரம் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி
என் அம்மாவின் அரப்பு கலர் புடவையை அணிந்திருக்கிறாள்.
நீண்ட கயிற்றில் இழைகள் பிரித்து பிரித்து
முடுச்சிட்டு கொண்டிருந்தாள்
எதற்கும் பிறழாத அவளது உலகம்
முடுச்சுகளால் நிரம்பியிருக்குமென நினைக்கிறேன் .
பட்டு, ஜரி, காட்டன், வாயில் என தரம் பிரித்து
பகிர்ந்து கொள்ளப்பட்டவைகளில்
கைகள் மாறி மாறி
இவளை அடைந்திருக்கும்
கழித்து கட்டப்பட்ட இந்த அரப்பு கலர் -
இழப்பை துளிர்க்கச்செய்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக