எல்லா மணங்களிலும் அதன் வேர்கள்
நீக்கமற நிறைந்து வளர்ந்திருக்கிறது
இத்தனை காலம் திளைத்த விஷத்தை
வேரோடு முறிக்க ஒரு பேரன்பு தேவைப்படுகிறது.
சூரியனின் வெளிச்சத்தை போல் சகல உலகுக்கும்
பொதுவான ஒரு பேரொளி தேவைப்படுகிறது .
ஒரு சூஃபியின் ஆனந்தத்தை எல்லோருக்கும் பரப்பும்
ஒரு பேரானந்தம் தேவைப்படுகிறது.
அன்பின் ஒரே அலைவரிசையில் எல்லோரையும் கோர்த்து
நம் நாளங்களை மீட்ட ஒரு பெரும் இசை தேவைப்படுகிறது.
நாமெல்லாம் சேர்ந்து நம்மை மீட்டெடுக்க
ஒரு பெரும் அன்பியாக்கம் தேவைப்படுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக