கத்தி, துப்பக்கி, அணுகுண்டு, வைரஸ்,
கெட்ட வார்த்தை, தீய்ந்த தோசை
என்றிருந்தது, இன்று -
ப்ளூ டிக் அடித்தும் கிடைக்காத பதில்
பக்கத்தில் படுத்தும் பேசாத உறவு
சேரவும் முடியாத
பிரியவும் முடியாத ஒரு முடை
சோகம் மறைக்கும் சிரிப்பு
பத்து நிமிடத்தில் தற்கொலை வரை யோசித்து
ரீலிஸ் பார்க்க போன் தேடும் மனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக