போராடி வெளியேற்றிவிட்டேன்
அமைதி கொள்கிறது மனம்
சகிக்க முடியாத நாற்றத்தியும்
பார்த்தவுடன் குமட்ட வைக்கும் கலவையை கொண்டிருக்கிறது
அந்த கந்தல்..
என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை வெறுப்புடன் பார்க்கிறார்கள்
சூனியத்தை கக்கியவன் என்று விளிக்கிறார்கள்
இப்படி ஏன் செய்தாய்?
உன்னால் எவ்வளவு பிரச்சனை!
எங்காவது போ..!
விஷம் இல்லாத நான் புத்தனென சிரிக்கிறேன்.
அவர்கள் மேலும் கோபமடைகிறார்கள்.
வசை. வசை.
உள்ளே விஷத்துடன் உழன்ற
பகையும் கீழ்மையும் திருட்டும் சமைத்து சமைத்து
பெருந்தனிமையுடன் கிடந்த எனக்கு
எல்லா வசைகளும் அன்பாக மாறுகின்றன
நான் உங்களை முதல் முறையாக பார்க்கிறேன்
எல்லோரும் அந்த விஷத்தை புதைப்போம்
வாருங்கள்.
ஏனெனில் அது என்னுளிருந்த
உங்கள் எல்லாருடைய விஷமும்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக