இத்தனை அன்பை நான் அடைய
இத்தனை பெரிய நோயை தாங்க வேண்டுமா?
இத்தனை பெரிய நோயை தாங்க வேண்டுமா?
இத்தனை கருணையை நான் பெற
இத்தனை தனிமையாய் இருக்க வேண்டுமா?
இத்தனை தனிமையாய் இருக்க வேண்டுமா?
இத்தனை பின்னல்கள் என தெரிய
கூட்டை கலைத்துதான் பார்க்க வேண்டுமா ?
கூட்டை கலைத்துதான் பார்க்க வேண்டுமா ?
உறவின் சாரம் அறிந்து கொள்ள
அதை முறித்துதான் பார்க்க வேண்டுமா?
இன்னும் வலுவடைய
இப்படி உடைத்துதான் கட்ட முடியுமா?
எல்லைகளை நான் அறிய
இத்தனை தூரம் கடந்து திணற வேண்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக