அவளது முலைகாம்புகளில் 
என்றும் பிச்சையெடுக்கிறேன் 
ஆணாகிய என் பாவத்தை 
தலை கோதியபடி 
அவள் கழுவிக்கொண்டிருக்கிறாள் 
ஆணின் ஆசை 
பெண் தன் மீது ஆசை கொள்ளவேண்டும் என்பது..
அவனது பேராசை 
அவளே அதை 
சொல்ல வேண்டும் என்பது 
இந்த பெரும் அண்டத்திடம் 
நான் வேண்டுவதெல்லாம்
ஒரு சிறு மேகப்பந்தும் 
அது தரும் ஒற்றை மனிதனுக்கான 
நிழலும்..
ஒரு காட்டில் பயணிக்கிறேன்
என் அறையில் அமர்ந்தபடி
சொல்லின் அதீத விருட்சத்தை 
தரிசிக்கிறேன்
பேய்கள் பிரசவிக்கும் 
இமை மயிர் உதிர்ந்து
அகம் நொறுக்கும் 
பாவங்கள் காட்டும் வானில் 
சில நட்சத்திரங்களை எண்ணுகிறேன்
தூறமாய்  கேட்கும் அருவி 
நம்பிக்கையின் திசையில்
சுற்றி சுற்றி  வருகிறேன்   
ஆதி பிழை உணர
சிறுமி  கையில் அவளது  மாட்டின்  கயிறு 
இழுவை என்று சொல்ல முடியாத சிறு சொடுக்கல் 
சொடுக்கல் என்று முடியாத சிறு இழுப்பு 
போதுமானதாக இருக்கிறது..
அவளது உள்ளங்கை அளவிலான 
அதன் கருவிழியை உருட்டி உருட்டி 
அத்தனை பெரு பச்சை மேய்ச்சலை 
அப்படியே விட்டுவிட்டு 
பாதி பசியையும் பெரு உடலையும் 
தள்ளியபடி 
அவளுடன் செல்கிறது 
அதன் மனம்..
தொலைத்துவிட்டேன் என்று தெரிந்த நொடியில்தான் 
நான் உறைந்திருக்கிறேன்..
நம்பிக்கையுடன் நான்தானே உன்னிடம் என்னை கொடுத்தேன்..
நீ தொலைத்து விட்டதை 
நான் எப்படி மீட்க முடியும்..
வேட்டையாடிய ஓநாயை 
பழக்கி கருணை பயின்று 
நாயென மாற்றி 
உன் பின்னே அலைய விட்ட வரைக்கும் சரி..
சுடும் வெயில் கோடையில் 
குப்பைமேட்டில் விட்டு சென்ற பின் 
மிரண்டிருக்கிறது அது..
கொஞ்சம் முயன்றால் ஓநாயாக மாறலாம்தான்..
உன் வாசத்தை மட்டும் தேடும் நாசியை 
தானே கீறிக்கொண்டிருக்கிறது..
நான் என்று ஆரம்பிக்கும் எந்த ஒரு வரியிலும் 
கவிதை விழுவதில்லை..
நான்-ஐ எழுதிவிட்டு வெறிக்கும் கவிஞன் 
வெகு நேரத்திற்கு பின் 
அதை அழித்து விடுகிறான்..
அழிக்கப்பட்ட நான்-களெல்லாம் 
நினைவில் ஒன்றை ஒன்று நோக்கி 
சலிப்புறுகின்றன..
இதுவைரை எதுவும் செய்ய வில்லை..
இனிமேலும் எதுவும் செய்ய போவதுமில்லை.
தெரிந்தும் முயற்சி என்ற பெயரில்
வாழ்ந்து கொண்டிருப்பவனின் 
நான்-கள் இரக்கமற்று குப்பையில் வீசப்படும் 
பின் அதுவே மக்கி அழியும்,..

ஒரு காடு 
மூச்சை இழுத்து விடும்
நிமிடங்களில்....
ஆம்..அப்படி நடக்கும் தானே?

செம்பருத்தியைப்போல் பூத்திருக்கிறது 
தென்னைமர நிழல் 
அதன் மத்தியில் அமர்ந்து 
அசைபோடுகிறது  மாடு 
நிழல் நகர நகர 
மாடும் நகருமா? 
தெரியவில்லை 
ரயில் நகர்ந்து விட்டது 
மீட்சி அடையமுடியாத பெரும் பலூன் 
என்று நம்பியவளுக்கு தெரிந்தது 
அது குட்டி குட்டி பலூன்களால ஆன
ஒரு பெரிய காற்று மூட்டை என்று..
புரிதலற்றுப்போதல் என்பது 
ஒவ்வொன்றாக உடைக்கப்படும் காற்று குடுவைகளே..
காற்றில் கடிவாளத்தை இழுத்து வேகம் செல்லும் 
சிறுவனின் குதிரைதான் அது..
அவளது பறத்தல் 
கீழிறங்கி  அந்தர தொங்கலாக  மாறும் தருணத்தில் 
அவள் தன்  சிறகுகளை  
பிரசவித்துக்  கொண்டிருந்தாள்..

கள்ளம்

குழந்தைக்கு தெரியாமல் சாப்பிடப்படும் சாக்லைட்டுகள் 
தாயிடம் எப்போதும் இருக்கும்தானே..
அந்த கள்ளத்தில் என்னையும் சேர்த்துக்கொள்..
பெருந்துயர் நாளின் உன்னுடைய தூக்கத்தைப்போல  
என்னிடம் நீ வந்து போ..
கோடை பயணத்தில் பழச்சாறுக்காக நிற்பதாக 
எண்ணிக்கொள் 
சில்லிட வைக்கும் சில நொடிகளை ஸ்பரிசித்துவிட்டு 
மீண்டும்  தழலை உடுத்திக்கொள் 

உண்மை மட்டும்  பேசவைக்கும் 
மோஸோ  திரவத்தை பருகியபின் 
ஆணையோ  பெண்ணையோ கேட்டால் 
தங்கள்  ஸ்பரிசிக்க நினைக்கும் 
ஒரு பெயரை சொல்லுவார்கள்..

கேட்பதற்கும்  இங்கு யாருமில்லை..
மோசோவை குடிப்பதற்கும் யாருமில்லை..

நிறைவேறாத மோகமே 
புழுவாக நெளிகிறது..

எல்லா பயணங்களும் 
தேநீர் உடனோ 
தேநீரை நோக்கியோ 
அல்லது தேநீரை நம்பியோ 
வாய்க்க பெருமாயின் 
எந்த குழப்பமும் இல்லை 


உன் உடலில்  நான் கண்டுபிடித்த தழும்பில் 
ஆரம்பிக்கறது இந்த நாளுக்கான ஆராதனை 
புதிய கிளையை கண்டுகொண்ட காட்டு  அணில்  
அதையே   சுத்தி சுத்தி வருகிறது ..  
பசி மீண்டும் மீண்டும் வந்தாலும் 
பழையதென சொல்ல முடியவில்லை   
புதிதான உடலை 
பருகுகிறது கிளர்ச்சி  
 

பிணம் இன்னும் வரவில்லை

ஒரு வீட்டை இழவுக்கு தயார்படுத்துதல் 
என்பது 
அந்த வீட்டின் அத்தனை சந்தோஷங்களையும் களைந்து 
ஒரு தனி அறையில் பூட்டி விடுவது..
அந்த வீட்டின் கடவுள்களை தண்டிக்க 
படங்களை சுவரோரம்  திருப்பி வைப்பது.. 
"எந்த திசையில் தலை விளக்கு வைக்க வேண்டும்?" என்ற
கேள்வியின் எதார்த்தில் கொஞ்சம் சுதாரிப்பது..
வரும் அத்தனை பேர்களில் 
ஒரு சிலருக்காக மட்டும் அழுகையை தேக்கி வைப்பது..
ஒரு மகிழ் தருண புகைப்படத்தை கொடுத்து 
இறப்பின் முகமாக மாற்றும் கொடூரத்தை 
தன் கையாலேயே நிகழ்த்துவது...
இப்போது தேவைப்படும் முக்கிய குறிப்பொன்றை தேடி 
அதை இறந்தவரிடமே கேட்க நினைத்து 
பின் அவரது இல்லாமைக்கு பழகுவது..
சொல்லாமல் விட்டுப்போன எளிய சொற்களை நினைத்து 
கழிப்பறையில் தண்ணீரை வெறுப்பது..
கேட்கவில்லை என்பதற்காக செய்யாமல் விட்ட உதவிகளை 
ஒவ்வொன்றாய் கோர்த்து கண்ணுக்குள் குத்திக்கொள்வது..

இன்னும் இரண்டு நாட்களில்
அவரின் உயிர் பிரிந்துவிடும் என்று சொல்லிவிட்டார்கள்
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
இல்லாமல் போகப்போகும் இந்த உயிரை 
அது இல்லாமலே போவதற்குள் 
லேசானதாக மாற்ற 
நான் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

கொஞ்சம்  நெகிழ்ந்திருக்கிறேன் 
வேறு  எதுவுமே நடக்கவில்லை இத்தருணத்தில் 
லாலிபாப்பை  சாப்பிடும் குழந்தையைப்போல 
இந்த நொடிகளை - 
வழிய வழிய குதப்பிக்கொண்டிருக்கிறேன்  

 
வீட்டை காலி செய்தாயிற்று 
கடைசியாக பூஜையறையை  பார்த்து வணங்கினார் 
அங்கு வேறெதுவும் இல்லை - காலிதான் 
பறவையின் சிறகுகள் 
எவ்வளவு பெரிதாக வரையப்பட்டாலும் 
நிஜத்தைவிட 
சிறியதாகவே இருக்கின்றன..

நடுக்கம்

எனக்கு ஒரு மூன்று வயது  குழந்தை  இருக்கிறாள்..

நேற்று  நான் வண்ணங்கள் வைத்து ஏதோ  வரைந்தேன் 
இன்று  அவளும் வண்ணங்கள் வைத்து வரைந்தாள்.

நேற்று  நான் கோபத்தில்  கத்தினேன் 
இன்று அவளும் கோபத்தில் கத்தினாள் 

நேற்று  நான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன் 
இன்று அவளும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள் 

நேற்று நான் பொய் சொன்னதை கண்டுபிடித்தாள் 
இன்று அவளே ஒரு பொய் சொன்னாள் 

நேற்று நான் தேன்  சாப்பிட்டு உச்சு கொட்டினேன் 
இன்று அவள் தேன்  சாப்பிட்டு உச்சு கொட்டினாள் 

இன்று நான் 
என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறேன்..
எல்லா மணங்களிலும் அதன் வேர்கள் 
நீக்கமற நிறைந்து வளர்ந்திருக்கிறது 
இத்தனை காலம் திளைத்த விஷத்தை 
வேரோடு முறிக்க ஒரு பேரன்பு தேவைப்படுகிறது.
சூரியனின் வெளிச்சத்தை போல்  சகல உலகுக்கும் 
பொதுவான ஒரு பேரொளி தேவைப்படுகிறது .
ஒரு சூஃபியின் ஆனந்தத்தை எல்லோருக்கும் பரப்பும் 
ஒரு பேரானந்தம் தேவைப்படுகிறது.
அன்பின் ஒரே அலைவரிசையில் எல்லோரையும் கோர்த்து 
நம் நாளங்களை மீட்ட ஒரு பெரும் இசை தேவைப்படுகிறது.
நாமெல்லாம்  சேர்ந்து நம்மை மீட்டெடுக்க 
ஒரு பெரும் அன்பியாக்கம் தேவைப்படுகிறது..

பந்தம்

மரத்திலிக்கும் ஒரு பழம் 
தன்னுள் ஒரு மரத்தையே வைத்திருப்பது தெரியாமல் 
காத்திருக்கிறது 
கைகளால் பறிக்கப்பட 
காற்றால் தள்ளப்பட 
அணிலால் கடிக்கப்பட  
பறைவையால் கொத்தப்பட .
பழம் என்பதை மறக்கும் பழம் 
கைகள் வளர்த்து 
கீழே குதித்து 
மண்ணில் புதைந்து 
வேர்கள் பரப்பி 
விருச்சமென வளர்ந்து 
உங்களுடன் போட்டியிடும் 

பீஃப் பிரியாணி

சின்ன மகன் பீஃப்   பிரியாணி கேட்டான் 
ஞாயிறன்று வீட்டு ஓனர் இருக்கமாட்டார் -  அதுதான் சரியான நாள் 
காலை எட்டு மணிக்கெல்லாம் 
ஏரிக்கரைக்கு அப்பால் இருக்கும்  குப்பை மேட்டின்  
அருகில் இருக்கும் இந்த ஊருக்கான மாட்டிறைச்சி கடையில்
ஒரு கிலோ வாங்க வேண்டும் 
பின், தெரு முனையில் இருக்கும் மளிகை கடையில் 
வெங்காயம் மிளகாய் மசாலா வாங்க வேண்டும்  
இல்லை இல்லை - முதலில் இறைச்சி வாங்கி 
பின்தெரு வழியாக வீட்டில் வைத்துவிட்டு, கைகால் கழுவி  
பின் மீண்டும் கடைக்கு போக வேண்டும், 
இறைச்சி வாசனை பிடிபட்டால் கடைக்காரர் முறைப்பார் 
பிரியானி  செய்து எல்லோரும் சாப்பிட்டவுடன் 
பாத்திரங்களை இரண்டுமுறை கழுவ வேண்டும் 
மாலையில் அம்மா வந்தால் முகம் சுளிப்பாள் 
பெரியவன் சொல்ல மாட்டான் 
சின்னவன் இன்னும் சின்னவனாகத்தானே இருக்கிறான் 



பனி விழும் முன் காலை வேளைகளில் 
கைகள் மட்டும் ஸ்பரிசித்து 
வெப்பமடையும்  
அன்பிற்கு பழகிய  உடல் 

அகராதி

அழுக்கு என்றால் துடைக்க தயார் 
எச்சில்  என்றால் கொஞ்சம் தயக்கம்.
தொடுதல், ஸ்பரிசம் என்பதிலிருக்கும் நேசத்தை 
தீட்டு என்று ஒதுக்கி வைப்பர் 
ஊர் என்று இருந்த மக்களை 
சேரி என்று தள்ளி வைத்தர் 
இறைச்சி என்று சுவைத்து வந்ததை 
கவுச்சி என்று கூறி முகம் சுளித்தர் 
படையலாய் அளித்து வந்ததை 
பிரசாதம் என்று சொல்லி தனியாய் வைத்தான் 


பிரிவினையின் நஞ்சை  அச்சில் வார்த்து 
மொழியின்  அகராதியில் ஏற்றி  
அங்கீகரிக்கும் மூடர்கள்..
 
 

உணவு ஏணி

சந்நிதியில் அர்ப்பணிக்கும் பிரசாதம் 
பெண் செய்ய தடை.. ஆண்  செய்ததே மேல்.
பிரசாதம் தான் மேல், மற்றவையெல்லாம் அதற்க்கு கீழ் 
சைவம் மேல், அசைவம் கீழ் 
சைவத்திலும், நிலத்தடி வளரும் காய்கள் கீழ் 
அதிலும் வெங்காயம் கீழ் 
வெங்காயம் சாப்பிடுவோருக்கு பூண்டு  கீழ் 
பூண்டு சாப்பிடலாம், சிலருக்கு முட்டை கீழ் 
முட்டையிலும் கோழி முட்டை சாப்பிடுவோருக்கு வாத்து முட்டை கீழ் 
முட்டை சாப்பிடுவோருக்கு இறைச்சியெல்லாம் கீழ் 
கோழி மட்டும் சாப்பிடுவோருக்கு மற்றவை கீழ் 
ஆடும் மீனும் சாப்பிடுவோருக்கு காடை, முயல் கீழ் 
இதுவரை சாப்பிட்டாலும் மாடு கீழ் தான்.
இதெல்லாம் சாப்பிட்டாலும் பன்றி கீழ் தான் 
அதற்க்கு கீழ் வரும் உடும்பும், எலியும், ஈசலும்..
எனதருமை உலக நண்பர்களே...
உணவு சங்கிலியைத்தானே நீங்கள் முன்மொழிந்தீர்கள்,
எங்களிடத்தில் ஒரு உணவு ஏணி இருக்கிறது பார்த்தீர்களா..
இந்த ஏணியில் நீங்கள் மேலே செல்லவே முடியாது 
வேண்டுமானாலும் கீழே சென்று வரலாம் - 
நிறைய அன்புடன்.

 நெடுஞ்சாலை நடுவில் பூத்திருக்கும் 
செவ்வரளியை பறிக்கும் பெண்ணொருத்தி 
அத்தருணத்தில் சட்டையணிந்திருக்கிறாள்..
வீட்டிற்கு சென்று சூடிக்கொள்ளும்போது 
தாவணிக்கு மாறுவாளோ?
தோற்றுப்போன போரிலிருந்து 
ஊர் திரும்பும் கடைநிலை போர் வீரன் 
உலர்ந்த பசியேறிய பயணத்தில் 
தன் பொறுப்புகளை பட்டியலிட்டுக்கொள்கிறான் 
தங்கள் தளபதி  வீழ்ந்ததை 
வீரத்தோடு சொல்லும் காட்சிகளை குறித்துக்கொண்டான்.
காயமடைந்தவர்களை தூக்கி சென்றதில் அவன்மேல் அப்பிய 
ரத்த கறைகள் போதுமானதாக இருக்கிறன..
இறந்தவானின்  வாளை யாருக்கும் தெரியாமல்  
மாற்றியாகி விட்டது. அதிலுள்ள ரத்தமும் இவன் வீரம் சொல்லும்.
இரண்டு வீரர்களின் கடைசி சொற்களை 
அவரது குடும்பங்களை கண்டுபிடித்து சேர்க்க வேண்டும்.
வீட்டுக்கு போகும் முன் கடையிலிருந்து ஒரு மிட்டாய் பொட்டலம் 
கண்டிப்பாக வாங்க வேண்டும்.

பூரணம்

கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம் 

பார்க்காத 
நிலவின் முதுகு 

விரட்டிவிடப்பட்ட 
பிச்சைக்காரனின் பசி 

படகில் செல்பவனுக்கு 
கடலை காட்டும் வெளிச்சம் 

நேற்று கவனித்த பூவின் 
இன்றைய வாடல் 

உச்சமடையும் முன்பிருக்கும்  
காமத்தின் நித்தியம்  

எரிமலைபிழம்பை  ஒரு கரண்டி எடுத்து 
ஊதி ஊதி உருண்டை பிடித்து - உரமாய் அளிக்கும்  
ஆதி தாயின் கருணை 

இல்லாத நுண்ணுயிர்கள் 
உடலை இல்லாமல் ஆக்கும் நடனம் 

ஒரு மழைத்துளி பல இலைகளில் சரிந்து சரிந்து 
நிலத்தின் விழுந்து வெடிக்கும்  சத்தம் 

நீ கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தேவதைகளின்
 துர் ஓலம் 

உன் இருப்பின் 
சகல சாத்தியங்களையும் 
உனக்கு காட்டும் பூரணம் 

கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம் 

அரப்பு

பனி பொழியும் குளிர்ந்த மாலையில் 
சாலையோரம் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி 
என் அம்மாவின் அரப்பு கலர்  புடவையை அணிந்திருக்கிறாள். 
நீண்ட கயிற்றில் இழைகள் பிரித்து பிரித்து 
முடுச்சிட்டு கொண்டிருந்தாள் 
எதற்கும் பிறழாத அவளது உலகம் 
முடுச்சுகளால் நிரம்பியிருக்குமென நினைக்கிறேன் .
பட்டு, ஜரி, காட்டன், வாயில் என தரம் பிரித்து 
பகிர்ந்து கொள்ளப்பட்டவைகளில் 
கைகள் மாறி மாறி 
இவளை அடைந்திருக்கும்  
கழித்து கட்டப்பட்ட இந்த அரப்பு கலர் - 
இழப்பை துளிர்க்கச்செய்கிறது 


வெயில் கவிதை

பந்தை  எடுத்த சிறுவன் 
கூடவே உருண்டுவந்த அதன் நிழலை 
தேடிக்கொண்டிருக்கிறான் 
யாருமில்ல்லாத அந்த ரயில் நடைமேடையின் 
கடைசி பெஞ்சின் மங்கிய வெளிச்சத்தில்  
ஒரு ஆணும் பெண்ணும்
கொஞ்சமாய் சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களின் பேரொளியை  
வேகமாய் கடந்த ரயிலில் இருந்த 
தரித்திரத்தை வெறித்திருந்தவன் 
தரிசித்து தூங்கச்சென்றான்.
என் விஸ்கிக்கான 
மீன் துண்டுகளில் 
முள்ளில்லாத பாகங்களை 
யார் எடுத்து வைப்பது 
நீ இல்லாமல் 
ஜன்னலோர ரயில் பயனத்தில்
தூரத்தில் வலையும் பாதை.  
வேறு ஒரு ரயிலை பார்பதுபோல் 
என் ரயிலயே நான் பார்க்கிறேன்
அடர் இருள்
மரங்களின் ஊடாக  தெரியும் நிலவு
நிழல் விழாத வெளிச்சம்
குளிர் நடுங்கம் அதிகலையில் நாய்கள் குறைத்து துரத்த
வேறு இடம் நகரும் பைத்தியக்காரன் 
தன் கம்பலியை அகல விரிது 
இன்னும்  இருக்கமாக சுத்திக்கொண்டு 
இதம் அடைந்தான்
இழவுக்கு போகிர விழியில்தான்
தோகை விரித்தாடுகிறது 
மனம்
கவிதை கொஞ்சும் வாழ்கையில் 
சிலநொடிகளே வரும் தரித்திரத்தின் பய்ச்சல்
 நல்லதொரு கவனசிதரல்
உறை போட இரவல் வாங்கிய 
கெட்டித்தயிர் 
எங்கள் வீட்டின்  நீர்த்த பாலுடன் 
கூட மறுக்கிறது.
 அதி வேகமாக சென்றுகொண்டிருந்தேன்  
நாயொன்று சாலையில் நடுவே  வந்துவிட்டது 
நான் திடுக்கிட்டு தடத்தை மாற்ற முற்பட்டேன் 
அந்த நாயும் பதறி திணறியது 
எங்களின்  பயந்த கண்கள் சந்தித்து கொண்டன 
அது மிகுந்த நம்பகத்துடன் நகராமல் நின்றது 
 

 ஒரு கோடைகால பூவை 

யாரும் பார்க்காமல்தான் கிடக்கிறார்கள்.

ஒரு நாய் அதனை முகர்ந்து  

அடுத்து இருக்கும் மரத்தில் 

தன்  வேலையை முடிக்கிறது. 

சோகத்தை மறைக்காதே நண்பா

 அவள்தான் முதலில்  பிரிவை அறிவித்தாள் 
அது ஒரு பேரிடியாய் இருக்குமென்று இவன் எண்ணினான் 
அழ முற்பட்டான் 
தலை சுற்றல் எதுவும் இல்லை.
எதிர் வந்த லாரியை பார்த்து தற்கொலை செய்ய வேண்டுமா 
என்று அவனே கேட்டு..ச்சீ  என்று விட்டுவிட்டான்..
அவள் பிரிந்ததை விடவும் 
அந்த பிரிவு எந்த ஒரு பெரிய சோகத்தையும் 
அவனுக்கு தரவில்லை என்பது வெறுப்பாய் இருந்தது.
உணவு, உடை, உறக்கம், மணம், சுவை எல்லாம் 
சரியாக வேலை செய்தது..
நண்பர்களிடம் சோகமாக முகத்தை வைத்து கொண்டான் 
அவர்களின் ஆறுதல்களை ஏற்றுக்கொண்டான்
தன்னை மறந்து கொஞ்சம் சிரித்துவிட்டாலும் 
நண்பன் சொன்னான் "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..

அவன் பார்த்த திரைப்படங்கள், கதைகள், கவிதைகள்
எல்லாவற்றையும் திட்டினான்..
சத்தமாய் கத்தினான் - காதல் என்பது 
இந்த உலகமே ஏற்றுக்கொண்ட பெரும் பொய்..
நண்பன் மீண்டும் சொன்னான்  "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..
"நீ காதலித்திருக்கிறாயா?" 
"ஆம்..மூன்று முறை.." என்றான் நண்பன்.
"பிரியும்போது உனக்கு சோகமாக இருந்ததா?" 
"பெரிதாக இல்லை" 
"அப்போ எல்லாம் போய் தான?" - இவன் சொன்னான்.
"அப்போ சேர்ந்திருந்தப்போ நீ சந்தோஷமா இல்லையா?" நண்பன் கேட்டான்.
"இருந்தேன்.." 
"அப்போ அது உண்மையில்லயா ?" 
".."

இப்போது இவன் 
சேர்ந்திருக்கும்போது சந்தோஷத்தை தருகிற 
பிரியும்போது சோகத்தை தராத 
தனது அடுத்த காதலுக்காக 
காத்திருந்தான்..

எந்த தருணத்திலும் பிரிந்து விடலாம் 
என்ற ஒப்பந்தத்துடன் சேர்ந்திருப்பது 
மூச்சு முட்டுகிறது.

நான் டிவி பார்க்கிறேன், நீ பாட்டு கேட்கிறாய் 
நான் தோசை சாப்பிடுகுறேன், நீ ஆர்டர் செய்கிறாய் 
என் கப், உன் கப் 
என் துணி, உன் துணி 
என் பைக், உன் ஸ்கூட்டர் 
என் சாவி, உன் சாவி
என்  வாழ்க்கை, உன்  வாழ்க்கை 
என்னுடன் பகிர்ந்து கொள்ள 
நம் வீட்டில் கழிப்பறையை தவிர 
வேறெதுவும் உன்னிடம்  இல்லை 

ஒரு சிலந்தியின் நேர்த்தியுடன் 
ஒரு நாளை நீ சீராக கடந்து விடுகிறாய் 
ஒரு விடுதி காவலனைப்போல் 
உன் அசைவுகளை நான் குறிப்பெடுக்கிறேன்
எந்த மாற்றமுமின்றி இயந்திர சுத்தத்துடன் நீ இயங்குகிறாய் 
நான் கோவமாய் கத்தினால்  என்ன செய்வாய் - தெரியாது.
நான் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வாய் - தெரியாது.
எனக்கு விபத்தில் கை உடைந்தால் என்ன  செய்வாய் - தெரியாது 
இதெல்லாம் நடக்காமல்  உனது இயந்திரகதியை 
நானும் மிகக்  கவனமாக காத்து வருகிறேன்.

நான் வெடித்து அழுது நிர்வாணமாய் 
உனக்கு முன்னால் நிற்க தயார்தான் 
அப்பொழுதும் நீ  எதுவும் சொல்லமாட்டாய் என்று தெரிகிறது..
என் பயமெல்லாம் ஒன்றுதான் 
"என்ன செய்ய முடியும்.. அழாதே"
என்று பக்கத்துக்கு வீட்டுக்காரனைப்போல்  
நீ சொல்லி விடுவாய் என்பதுதான்..

நேசத்தின் கண்கள் எப்பொழுதும் நீர்த்திருக்கின்றன..

வளர்ப்பு

என் குழந்தை இப்படி சொன்னாள் -
"நான் பெரிய பொண்ணா வளர்ந்து 
பெரிய அக்கா மாதிரி ஆயுடுவேன்.."
"good  girl  பாபா "
"அப்பறமா நான் குறும்பே பண்ணமாட்டேன்..
நீ என்ன அப்போ திட்டவே கூடாது.."
"..."
வளர்ப்பு என்பது என்ன..
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் 

லாக்டௌன்

பொம்மைக்கடைக்காரரின் குழந்தை 

எதிரில் இருக்கும் தின்பண்ட கடையை 

ஏக்கமாக பார்க்கிறது 

நைந்த  தலையணையை 
கிழித்து உதறினாலும் 
பழைய பஞ்சுகள்  
பறப்பதில்லை

கொசு

 என்னை நோக்கி வரும் கொசுவை 

லாவகமாக mosquito bat கொண்டு அரைக்கிறேன் 

மின்சாரம் தாக்கி அதன் சிறு உடல் 

பெரும் அதிர்வுடன் வெடிக்கிறது 

கால்களும் ரேகைகளும் தூசியென உதிர்கின்றன 

அது குடித்த  ரத்தம் சுண்டி, பொசுங்கி, புகையாகிறது 

அதன் குறித்த சுவையை நுகர்ந்து 

நான் உச்சமடைகிறேன் 

சர்வ வல்லமை படைத்த பார்த்தசாரதியின் 
கோயில் கோபுரத்தில் அமரும் புறாக்கள் 
எந்த ஒரு பயமுமின்றி  எச்சமிடுகின்றான் 
 நீ இல்லாமல் வாழ்வதற்கு 
நான் பழகி வருகிறேன்.
திடீரென ஒரு மழை இரவில் 
திடுக்கிட்டு எழுகிறேன்..
பயத்தில் நெஞ்சு கனக்கிறது 
இடி என் தலையில்தான் விழுகிறது..
என் விரல்கள் இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
பெரும் சத்தத்துடன் என் சுவாசம் ஒரு எந்திரத்தை போல அரற்றுகிறது 
வடிந்தோடும் கண்ணீர் என் சோகம் உணர்த்துகிறது..
நான் பெரும் ஓலமிட்டு யாருமில்லாத மழை இரவில் அழுகிறேன் 
அன்பே.. நான் இல்லாமல் நீயும் 
வாழ பழகி விடுவாயா?
how do we settle the differences?
we both want to go in two different directions
easy thing we choose to split and each to go as we please
but then there is no us in that
we are almost singles without our significant other..
we return back to our home as always

we put our bodies to sleep in the same bed
but in different corners
we use the same bathroom
but ensure to spray air freshner to erase our smell 
we use the same kitchen
but cook our own food
we have same tv
but use different netflix accounts
And we take care of the baby at different times

suddenly, this is what we are..
two people time slicing a bed, bath and a baby
two people under same roof alive without life
two people creating their own worlds
two people having their own parties to attend
two stars in their own worlds
two blackholes swallowing each other
two people building a void
two people thinking whats the point
two people stubburnly independent
two people foolishly intelligent
two people competing to win a nothing

ஒரு முழு மெனக்கெடலை கொட்டிய அன்பு

திடீரென்று நீ என் முன் வந்து நின்று 
புருவத்தை உயர்த்தி "எப்படி என் surprise ?" என்று கேட்கிறாய்..
நான் கண்கலங்கி அழுது ஊரையே கூட்டிவிடுகிறேன்..
நீ கோவமும் குழப்புமாய் இருக்கிறாய்..
நான் ஏன் இவ்வளவு மூர்ச்சை அடைகிறேன் என்று கேட்க்கிறாய்..
ஒரு ஆச்சரிய தருணத்தை நான் சந்தித்து எத்தனையோ நாட்களாகிவிட்டது 
ஒரு முழு மெனக்கெடலை கொட்டிய அன்பை நான் கண்டு எத்தனையோ நாட்களாகிவிட்டது ..
என்னை மட்டுமே பார்த்து சிரிக்கும் கண்களை சந்தித்து எத்தனையோ நாட்களாகிவிட்டது ..
வெறுமையின் கிடங்கில் ஒரு சிறு குருவி பறந்து வருகிறது..
அதன் ரெக்கைகளின் சத்தம் அந்த அண்டமெங்கும் எதிரொலிக்கிறது..

கற்கையர்கள்

தண்ணீரில் விளையாட போன குழந்தையை
அடிக்க தூக்கிய அப்பாவின்  கை
கல்லாக மாறியது
ஆசிரியரின் கை கல்லாக மாறியது
தெருவில் சண்டையிட்டவர்களின் கை
கல்லாக மாறியது
ரௌடிகளெல்லாம் வேலையற்று போனார்கள்
திரைப்படங்களில்  சண்டைகாட்சிகள் இல்லாமல் போயின
போலீஸ்காரர்கள் முடங்கி போனார்கள்
சர்வாதிகார அரசுகள் கவிழ்ந்தன

பலர்  கல்லாக மாறிய கைகளுடன்
வெளியே வருவதில் அவமானபட்டனர்
வன்முறையாளர்களை மக்கள் ஒதுக்கினார்கள்
மனிதர்கள் இரண்டு வகையாக பிறந்தனர்
மனித கையர்க்கள் இன்னும் சந்தோஷமாக இருந்தனர்
கற்கையர்கள் இன்னும் கோபமேரி கல்லாகவே மாறினார்
சிலர் கொஞ்சமாக திருந்தி தங்கள் மனித கைகளை
திரும்ப பெற்றனர்

அப்பா குழந்தையிடம் கேட்டார்
"நீ வெளில போய்  தண்ணில விளையாடுறயா?"
குழந்தை யோசித்தது
"இங்க தண்ணி சிந்தினா அப்பா எல்லாத்தையும் தொடைக்கணும்"
குழந்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது.

இந்த சமூகம் கேட்பதற்கு தயாரானது.

E for Elephant, H for Human

You gave me a pineapple
But, I was looking for a forest

You gave me gunpowder
But, I chose to die with peace

You said you have a sixth sense
But, I don't think it makes any sense

You said I am a magnificent animal
But am only a tiny part in our land

You say it was meant for a wild boar
But, am glad I saved a poor boar

You cried for me when this went viral
But, tell me something, what happened to our sparrows?

You know so much from an atom to universe, and beyond
But, can you please add love in your list

You teach your kids, E for elephant
But, I learnt that I shouldn't stop at H for Human

You gave me a pineapple
But, I was looking for a forest





லாபகரமான வாழ்க்கை

காலம், எனக்கான வட்டத்தை
தனது தர்க்தின்  பற்களால்
விழுங்கி விழுங்கி சிதைக்கிறது..
"இதனால் உனக்கு ஏதேனும் லாபம் உண்டா?"
என்று எப்போதும் கேட்க்கிறது.
என் திருமணம்  லாபகரமானது..
என் உறவு லாபகரமானது..
என் நட்பு லாபகரமானது..
என் உதவி லாபகரமானது..
என் தானம் லாபகரமானது..
என் வேலை லாபகரமானது..
என் ஓட்டு லாபகரமானது..
என் குழந்தையின் படிப்பு லாபகரமானது..
நான் லாபத்தினால் மூளைசலவை செய்யப்பட்டுள்ளேன்..
வேறொன்றும் செய்ய முடியாத ஒரு இரவில் 
ஒரு பாடல் கேட்கலாம் என தோன்றியது.
எனக்கு எந்த பாடலை கேட்பதென்று தெரியவில்லை 
ஏனெனில் இசை லாபகரமானது அல்லவே..

தயவுசெய்து கதவை மூடவும்

நான் எங்கள் மின்தூக்கியிடம் பேசினேன்..
நலம் விசாரித்து கொண்டோம்..
குப்பை பைகளை கொண்டுவருவதால் தனக்கு மூச்சடைப்பதாக அது கூறியது ..
பாதியில் மின்தூக்கி நின்றதால் பயந்துபோன ஒரு பாட்டியை நினைத்து வருந்தியது..
சுத்தம் செய்யும்பொது அதன் பொத்தான்களை சரியாக சுத்தம் செய்யவதில்லை என்று வருந்தியது..

தினமும் மூன்றுமுறையேனும்
எங்கள் மின்தூக்கியில்
மேலும் கீழுமாக சென்று வருகிறேன்..
காரணமே இல்லாமல் அதன் கதவுகளை
திறந்தே வைக்கிறேன்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."
மூன்று நொடி நிசப்தம்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."
மூன்று நொடி நிசப்தம்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."

கதவை மூடினால் என்ன தருவாய் என்று கேட்டேன்..
என்கள் அந்தரங்கம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது..
நான் எங்கள் மின்தூக்கியிடம் பேசினேன்..


- லாக்டௌன் பக்கங்களில் இருந்து..

ஒரு கருப்பு அழகி 
நீல சோகத்துடன் இருந்தாள்..
பச்சை பொய்யொன்றை  சொன்னேன்..
சிவந்துவிட்டாள்.

கலையை ரசிக்கும் மனம்

கதைகளின் காட்டுத்தீயில்
கருகும் மனம்
கவிதைகளின் பேரலைகளில்
தத்தளிக்கும் மனம்
பேரானந்தத்தில் திளைத்து
மென்மையாய் சிரிக்கும் மனம்
இவைதானே கலையை ரசிக்கும்
சிறு பொழுதின் மனம்?
எத்தனை பொய்களை கடக்க வேண்டும்
சிறு உண்மைகளை தரிசிக்க..

ஒரு பேரிடரை எதிர்பார்த்து..

நான் ஒரு பேரிடரை எதிர்பார்த்து தினமும் காத்திருக்கிறேன்
தினமும் அதற்காகத்தான் செய்திகளை வாசிக்கிறேன்
அருகில் ஒரு புயலோ, எரிமலையோ, சுனாமியோ
இல்லாமல் இருப்பது அயர்ச்சையாக இருக்கிறது

பள்ளிக்கு விடுப்பு கிடைப்பதாக 
ஒரு அல்ப மனநிலைதான் ஆனாலும்
ஒரு வாரம் அலுவல் இல்லது,
மிகவும் கொஞ்சமே சமைத்து
மின்சாரமோ அலைபேசியோ இல்லாமல்
சக மக்களை பற்றி யோசித்து
கொஞ்சமாக உதவி செய்து 
சோம்பலான சில நாட்கள் தேவைப்படுகிறது


ஒரு பேரிடர்
நம் ஓட்டத்தை தடுத்து
"கொஞ்சம் நில்லு..தண்ணி குடி" என்கிறது..

ஒரு பேரிடர்
அடிப்படை உணர்வுகளை
கிளர்ச்சியடைய செய்கிறது

ஒரு பேரிடர்
நம் சொந்தங்களுக்காக
ஏங்க வைக்கிறது

ஒரு பேரிடர்
நம்மையே ஆட்க்கொண்டாலும்
பெரிதாக ஒன்றும் கஷ்டமில்லை

ஒரு பெண் என்பவள்
ஏன் இவ்வளவு பெரிய மலையாய் இருக்கிறாள்
எதிரே இருப்பது ஒரு பெண் என்பதை கடக்க
சகஜமாய் உரையாட
ஒரு ஆண் எத்தனை உணர்வுகளை
கொல்ல வேண்டியிருக்கிறது..
ஆண் ஏன் இத்தனை ஈனமாய் இருக்கிறான்
ஆண் ஏன் இத்தனை குழம்பி  இருக்கிறான்
ஆண் ஏன் இத்தனை வெட்கப்படுகிறான்
ஆண் ஏன் இத்தனை பயந்திருக்கிறான்
ஆண் ஏன் இத்தனை, இத்தனை, இத்தனை..

ஒரு ஆண் ஏன் இத்தனை பாவமாய் இருக்கிறான் 
உயரமான அப்பாக்கள்
குழந்தையை கைபிடித்து நடத்திச்செல்ல
குனியத்தான் செய்கிறார்கள்

அன்புத்தோட்டா

அன்பை ஒரு தோட்டாவில் அடைத்து சுடுகிறேன்
"உங்கள் பாவங்களையெல்லாம் ரத்தமாய்
உங்கள் உடலே வெளியேற்றும் " என்கிறேன்..
"அப்படியானால் நாங்கள் இனி
நல்லவர்களாக  இருப்போமா?" என்று கேட்கிறீர்கள்.
நான் அவசரமாய் சொல்கிறேன்
"அப்படியில்லை..
இதுவரையிலான உங்களின் பாவக்கணக்கு
நேர் செய்யப்பட்டுள்ளது..
இதன் பிறகு  நீங்கள்தான் மீண்டும் அது
தொடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"

உங்கள் முகத்தில்தான் எத்தனை ஏமாற்றம்

புத்தனுக்கும் உங்களுக்கும் எட்டாதூரம்

பூனைக்குட்டியை  ஏன் நசுக்கி கொண்றீர்கள்?
நான்தான் அதற்காக அழுதுவிட்டேனே

மாட்டிறைச்சி சாப்பிடுபவனை ஏன் கொண்றீர்கள்?
நான்தான் அதற்க்கு வருத்தம் தெரிவித்து விட்டேனே

அரிசி திருடியவனை எதற்க்காக கட்டிவைத்து அடித்து கொண்றீர்கள்?
நாங்கள்தான் அதற்க்காக சிறை தண்டனை பெற்றுவிடடோமே

அது சரி.. நீயேன் இத்தனை விசனப்படுகிறாய்
ஏனென்றால் ஒரு உயிரை வாழவைக்கும்
அடிப்படை  அன்புகூட உங்களிடத்தில் இல்லையே ..
உங்களிடத்தில் எப்படி புத்தனை பற்றி பேசுவது?

கழிப்பறையில் புகுந்த பூரான்

வாழ்க்கை முழுதும் திரும்ப திரும்ப போனாலும்
சலிக்காத ஒரு இடம்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு இடம்
என் மீது மதிப்பீடுகள் இல்லாத ஒரு இடம்
யாரும் பார்ப்பதில்லை என்று தெரிந்தும்
தவறுகள் எதுவும் நடக்காத இடம்
இந்த ஈன உடலின் உண்மையை
நாம் பொறுத்துக்கொள்ளும் இடம்

எதையுமே சிந்திக்காத சில நிமிடங்கள்
சிந்தனையில்  நீயில்லை, அவரில்லை, நாடில்லை 
அட நானும் கூட இல்லை..
மெய்யான ஒரு இல்லாமையை வெறிக்கும் ஒரு இல்லாமை 
அப்போது காலருகில் நெளியும்  ஒரு பூரானை 
என்ன செய்ய?
காலியான சிந்தனையில் இப்போது கோபம் மட்டும் 
அத்தனை ஆத்திரம்..
அது பயமில்லை.. கண்டிப்பாக பயமில்லை..
எத்தனை பெரிய விஷ பாம்பாக இருந்தாலும் 
கழிவறையில் புகுந்தால் கோரமாகத்தான் சாகிறது..

ஏன் கழிப்பறை இத்தனை உன்னதமான இடமாக இருக்கிறது?
அல்லது 
இத்தனை உன்னதங்களெல்லாம் கழிப்பறையாக இருக்குமோ?

இரவின் சாலைகள்

சாலையின் ஓரம் இருளில்
ஒரு ஆணும் பெண்ணும்
முகம் மூடியபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்..

நிர்வாணத்தை மறைக்க இருள் தேவை
சிறு முத்தம் அரங்கேற இருள் தேவை
இருவர் பேசிக்கொள்ளவும் இருள் தேவை
இருள் அத்தனை சுதந்திரத்தை தருகிறது

இருளென்பது ஒரு மாய உலகம்
நீங்கள் யாரும் இல்லாத எங்களுக்கான உலகம்
ஒரு சுவிச்ச்சை அனைத்து எங்களால்
அந்த உலகத்துள் நுழைய முடியும்..
எதை அணைத்து நீங்கள் அதில் நுழைய போகிறீர்கள்?

வீடு

எரிமலை பிழம்பிலிருந்து 
ஒரு நதிக்கரையோரம் 
அன்பு சூழ் உலகம் 
சிறிய சுவர்களுக்குள் என்னால் கையாலானவை மட்டும் 
அடிமை படுத்த முடியாத சிறு நாடு 
மகிழ்ச்சியின் கொக்கரிப்பு 
அன்பின் அகங்காரம் 
எங்கும் கிடைக்காத தேங்காய்ப்பூ வடை 
மாதவத்தின் அமைதி 
உறவின் பெறுநதி
சிதறும் கரித்துண்டுகள்
அடித்துக்கொள்ளும் நாய்கள்
கனவிலும் வராது
துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டி..

குப்பை பொருக்கிகளின் அறம்

நீங்கள் எத்தனை குப்பைகளை
விட்டுச்செல்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
ப்ளாஸ்டிக் மட்டுமல்ல..
அன்பை விதைக்காத அத்தனையும் குப்பைதான்!

நீங்கள் விட்டுச்செல்லும் எல்லாமே
இந்த பூமியை மலடாக்கிவிடடன
எங்களின் இரைப்பையில் அடைபட்டு
திணற திணற சாகடிக்கின்றன

எங்களின் அடையாளம் என்ன தெரியுமா?
நாங்கள் குப்பை பொருக்கி தலைமுறை..
உங்கள் குப்பைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தவிடாமல்
தசாப்தங்களாய் மண்டிக்கிடக்கும்   நாற்றமிக்க
மக்காத உங்கள் பிளாஸ்டிக் குப்பைகளை
தேடித்தேடி எரிக்கும் பொருக்கிகள்..

உங்களின் குப்பைகளுக்கு 
எங்களின் ஒரு தலைமுறையே பலியாகியிருக்கிறது..
பரவாயில்லை..
நாங்கள் எதுவும் புதிதாக செய்யவில்லை..
செய்யவும் முயலவில்லை..
செய்யவும் முடியாது ..
செய்யவும் கூடாது..
நாங்கள் நன்கு அறிவோம் -
வரலாற்றில் எங்கள் பெயர்கள் இல்லாமலே போகும்..

குப்பை பொருக்கிகளுக்கு ஏது வரலாறு?
தூறலை 'தூத்தல்' என்று நீ சொன்னவுடன் 
எனக்கு நீ நண்பனாகிவிட்டாய்.
மழைக்கும் அன்புக்கும்
ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது.

அமைதி

சிகரெட்டின் கடைசி கங்கு
குடைக்கு வெளியே நீட்டி காத்திருந்தான்
மழை பெய்துகொண்டிருக்கிறது

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

அன்பு செலுத்துவதற்கு மட்டும்
யாராவது சம்பளம் தந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்

மனித வரலாற்றின்
மிகவும் பழையதொரு பக்கத்தில்
யாரோ ஒரு பாதகன் சொல்லிவிட்டான்
"அவனை விட நான் சீக்கிரமாக
வேலையை முடித்து தருகிறேன்..
எனக்கு அதிக பணம் கொடுங்கள்" என்று.
அவனை அங்கேயே கொன்றிருந்தால்
இப்படியெல்லாம் நேர்ந்திருக்காது.

இப்போது பாருங்கள் -
நம் ஒவ்வொருவரும் ஒரு கடிகாரத்தை
சுமந்துகொண்டு அலைகிறோம் ..


தூத்துக்குடி

என் தமிழ்நாடு என்ற ஒரு நம்பிக்கை இருந்தது
அதில் ஒரு அமைதி இருந்தது
அதில்தான் விழுந்தது உன் முதல் குண்டு.

காந்தியும் பெரியாரும் கலந்து தெளிந்த மக்கள்
அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த அரசு
எத்தனை தெளிவானதாக இருக்க வேண்டும்?
மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..
நீங்கள் எங்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லையென..
இந்த முற்போக்கான சமூகத்துக்கான தலைமை வகிக்க
நீங்கள் வக்கற்றவர்களென
உங்களுக்கான எங்களின்  கருணையில்தான்
உங்களின் இரண்டாவது குண்டு வெடித்தது..

நாங்களெல்லாம் ஒன்று திரள்வது எதற்காக தெரியுமா?
உங்களின் தவறுகளை சுட்டிக்காட்ட..
நீங்கள் திருத்திக்கொள்ள..
உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க.
நன்றாக யோசித்து சொல்லுங்கள்..
ஸ்டெர்லைட் உங்கள் தவறு..
ஜல்லிக்கட்டு உங்கள் தவறு..
விவசாய தற்கொலைகள் உங்கள் தவறு..
பெட்ரோல் விலை உங்கள் தவறு..
காவிரி உங்கள் தவறு..
இன்னும் நிறைய..
தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு துடிப்பான  சமூகம்..
அவர்களை சுட்டுக்கொள்ளும் ஒரு மலடான அரசு..

தூத்துக்குடியில் சில ஆயிரம் மட்டுமல்ல..
நாங்கள் எல்லா இடத்திலும் உள்ளோம்..
இன்னும் பொறுமையாகத்தான் இருக்கிறோம்..
அவ்வளவுதான் சொல்ல முடியும்..
ஏனெனில் எங்களின் பொறுமை
எங்களுக்கே வெட்கமளிக்கிறது..
உங்களின் ஏதோ ஒரு குண்டு எங்கள் பொறுமையை
கொஞ்சம் உரசித்தான் சென்றிருக்கிறது..


எங்களுடையது
அகிம்சையின் கோபம்
முற்போக்கின் கோபம்
சுயமரியாதையின் கோபம்
தர்க்கத்தின் கோபம்
உங்களுடையது?
அதிகாரத்தின் கோபம்
அடக்குமுறையின் கோபம்
கையாலாகாத அரசின் கோபம்..
எங்கள் பக்கம் ஞாயமிருக்கிறது என்பதை
ஒப்புக்கொள்ள முடியாத அகங்காரத்தின் கோபம்
உங்களுடையது ஒரு கோழையின் கோபம்..
நீங்கள் எங்களின் தலைவர்களாக இல்லை,
சமமான எதிரியாகக்கூட இருக்க
வக்கற்றவர்கள்..

தயவு செய்து விலகிவிடுங்கள்!!
தாமரை மலரும்
சூரியன் உதிக்கும்
இலை துலிர்க்கும்
குக்கர் விசிலடிக்கும்
கை ஏதோ செய்யும்.
அதெல்லாம் சரி..
படகு எப்போ திரும்பும்?
காவிரி எப்போ திறக்கும்?
விவசாயம் எப்போ செழிக்கும்?
கூவம் எப்போ மனக்கும்?
கீழடி எப்போ திறக்கும்?
டெங்கு எப்போ ஒழியும்?
டாஸ்மாக் எப்போ மூடும்?
தோழனுக்கு எப்போ கோயில் திறக்கும்?
ஜாதி எப்போ ஒழியும்?
நம் தலை எப்போ நிமிரும்?
சோறு எப்போ கிடைக்கும்?

நல்ல வேளை!!

நல்ல வேளை!
நாம்  பார்த்துக்கொண்டு இருக்கும்போதே
 பூக்கள் வாடி வதங்கி கருகி விடுவதில்லை
காலையில்  மலர்ந்திருக்கும் ரோஜா 
நம் வேலைகளையெல்லாம் முடித்து வரும்போது 
மாலையில் வாடியிருப்பது  
எத்தனை சௌகரியமாக இருக்கிறது..
எப்பேர்பட்டது இயற்கையின் கருணை..

சில வலிகளை
நான் உன்னிடம் சொல்வதில்லை
அன்பின் எல்லையை
வலிகள் நிர்ணயிப்பது
அதிசயமாகத்தான் இருக்கிறது..
'இந்த வலியை உன்னிடம் சொல்லி
என்ன ஆகப்போகிறது?'
(அ)
'உனக்கு புரியாது'
(அ)
'உன் கேள்விகளுக்கு என்னிடம் பதிலிருக்காது'
என்று ஏதாவது ஒரு எண்ணம் வரும்பொழுதே
நம் அன்பின் மீது  ஒரு கீறல் விழுந்துவிடுகிறது...
உனக்கு தெரியுமா?
வலிகள்தான் அன்பை கீறுகின்றன
வலிகள்தான் அன்பை குத்தி கிழிக்கின்றன
வலிகள்தான் அன்பை சிதைக்கின்றன

அன்பின் மீதான ஒவ்வொரு வன்முறைக்கும்
நிறைய பேச வேண்டியிருக்கிறது
நிறைய கேள்விகளை எனக்குள் கேட்க வேண்டியிருக்கிறது
உன் எல்லா தர்க்கங்களுக்கும் உண்மையை தேட வேண்டியிருக்கிறது..
என் அடி ஆழத்தின் புரிதலை
கொஞ்சம் புரட்டிப்போட  வேண்டியிருக்கிறது..
அது ஏற்படுத்தும் பூகம்பங்களை
தாங்க வேண்டியிருக்கிறது..
ஏனெனில்.. அன்பு அத்தனை எளிதாக
தன் எல்லையை விரிப்பதில்லை..

அதனால்தான்
சில வலிகளை
நான் உன்னிடம் சொல்வதில்லை.

கோழிப்பண்ணை லாரி
காலியான கூண்டுகள்
மிச்சமிருக்கும்  இறகுகள்

பூனை குட்டியின் நெடுஞ்சாலை நிமிடம்

ஒரு பூனைக்குட்டி நெடுஞ்சாலையை கடக்க பார்க்கிறது
இத்தனை வாகனங்கள் கடப்பதை
கொஞ்சமும் சட்டை செய்யாமல் அது இருக்கிறது..
அதன் தவறாகவே இருக்கலாம்..
இருக்கட்டுமே..
உங்களுக்கென்ன அவ்வளவு அழுத்தம்?
நீங்கள் போட்ட சாலைதான்..
நீங்கள் வடிவமைத்த நகரம்தான்..
நீங்கள் வரைந்த சடடம்தான்...
நீங்கள் நம்பும் சாதிதான், மதம்தான்..
உங்கள் மனிதருக்கான உலகம்தான்..
அதில் ஏன் ஒரு பூனைக்குட்டி பலியாக வேண்டும்?

விஷத்தை மட்டுமே உண்ணும் பெருநாகம் - அவள்

உனக்கான அன்பில்
எனக்குள்  கொஞ்சம் விஷம்
இல்லாமல் இருப்பதில்லை

விஷத்தால் மட்டுமே ஆன
ஒரு குட்டி கிருமி
என்னுள் நெளியத் தொடங்கிவிட்டது

என் கண்ணீருக்கான நிராகரிப்பில்
ஒரு துளி விஷம்..
என் ஆசைகளுக்கான நிராகரிப்பில்
ஒரு துளி விஷம்..
'எதற்காக நான் உனக்கு இதை செய்ய வேண்டும்?' - நீ
ஒரு துளி விஷம்..
'எதற்காக நான் உனக்கு இதை செய்ய வேண்டும்'? - நான்
ஒரு துளி விஷம்..
உன் தர்க்கங்களின் அநீதிகளில் 
ஒரு துளி விஷம்..
'ஏனென்றால் நீ ஒரு பெண்'
ஒரு துளி விஷம்..

அன்பிற்கு ஏது தர்க்கங்கள்?
'இதற்காக' என்று காரணங்களை தேட விழையாத
ஒரு காலத்தில் நாம் வாழ்ந்த பொன்னான  உறவை
நம்மால் எப்படி மீட்க முடியும்?

தர்க்கங்களின் கைகளில்
நம் உறவை கொடுத்த நொடியில்
நாம் பிரிந்திருக்க வேண்டும்
பிரியாத  என் காத்திருப்பு கூட
மிச்சமிருக்கும் அன்பின் அடையாளம்தான்..
அதற்கான தர்க்கம் எதுவும் என்னிடமில்லை..

மன்னித்து விடு..

என்னுள் இருந்த கிருமி
புழுவாகி, சிறுபாம்பாகி
இப்போது விஷத்தை மட்டுமே உண்டு
வன்மத்தில் திளைத்த
பெரு நாகமென சீறிக்கொண்டிருக்கிறது..

அதன் சீற்றங்களே என்  அசைவுகள்..
அதன் சீற்றங்களே என் கேள்விகள்..
அதன் சீற்றங்களே என் புறக்கணிப்புகள்..
விஷம் கக்கும் என்னை
உன்னால் கொஞ்சமும்  அடக்க முடியவில்லை
எனக்கு புரிகிறது..
உனக்கும் அந்த நாகத்தின் பிம்பம் தெரிய தொடங்கிவிட்டது..
நீ கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்..
எனக்கு புரிகிறது..

மன்னித்து விடு..

அது உன்னை விழுங்கத்தான் போகிறது..
பின் என்னுள் அது வெடித்து 
என்னையும் அது அழிக்கத்தான் போகிறது..

மன்னித்து விடு..

தர்க்கங்களின் கைகளில்
நம் உறவை கொடுத்த நொடியில்
நாம் பிரிந்திருக்க வேண்டும்..
எனக்குள் இருக்கும் சிறு அன்பின் எச்சமே
எனது இந்த கவிதை..

மன்னித்து விடு..

நிர்வாணம்


எல்லாவற்றையும் களைந்து
நிர்வானமான உங்களை
கண்ணாடி முன் ஒரு முறை பாருங்கள்..
அது நூறு சதவிகிதம் அன்பால்
ஆனதில்லை என்றா சொல்கிரீர்கள்?
கொஞ்சம் நம்புங்கள்..

இப்போது
உங்கள் நாய்குட்டியின்
எஜமானை எடுத்து அணிந்து பாருங்கள்..
அந்த நூறில் ஒரு புள்ளி கூட குறைய கூடாது..
அப்படியானால் அணிந்து கொள்ளுங்கள்..

இப்போது
உங்கள் திருமணத்தை  அணிந்து பாருங்கள்
அந்த நூறில் ஒரு புள்ளி கூட குறைய கூடாது..
அப்படியானால் அணிந்து கொள்ளுங்கள்..

இதேபோல்
உங்கள் மதத்தை, ஜாதியை, நம்பிக்கைகளை
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக
அணிந்து பாருங்கள்..

எது உங்களுக்குள் இந்த வெறுப்பை விதைக்கிறது?
எது உங்களை அன்பு வழியிலிருந்து
விலகச் செய்கிறது?
அதை அணியாதீர்கள்.. விட்டுவிடுங்கள்..
அது வைரத்தால் ஆனது என்றாலும்
அது உங்களின் அடையாளம் என்றாலும்
அது உங்களின் அடுத்த வேளை உணவை தர துடித்தாலும்
விட்டுவிடுங்கள்..

நம்புங்கள்..
நீங்கள் நூறு சதவிகிதம் அன்பால் ஆனவர்..

ஐன்னலோர ரயில் பயணம்
குளிரும் டிசம்பர் மதியம் 
மஞ்சள் சாமந்தி வயல் கூட்டம்

வெறுமையின் நிறைவு..

அலுவலுக்கு இடையே
ஒற்றை சிறகு
மெல்ல மெல்ல மிதந்தும்
காற்றில் முழுகியும்
இறங்கிக் கொண்டிருக்கிறது..
என்னருகே இருப்பவர்
என் பதிலுக்காக காத்திருக்கையில்,
என் தேநீர்
கோப்பையில் ஆவியாக ஆருகையால்,
என் சாய்வு நாற்காலி
கொஞ்சமாய் சாய்ந்து சின்னதாக கிரீச்சிடுகையில்,
நான் இன்னும் அந்த சிறகினுயூடே
லயித்திருக்கிறேன்..
அந்த கணத்தின் மௌனம்..
அந்த காலியான மௌனம்..
அத்தனை அழகான நிறைவு..
அத்தனை அழகான வெறுமை..
அந்த வெறுமை தந்துவிட்டு  போன அளவில்லா  நிறைவு..
ஒன்றுமில்லாத விஷயங்களில்தான்
எத்தனை இருக்கின்றன..

புயல்

புயலின்போது
கிளைகளை உதிர்த்த மரங்கள்
வேரூன்றி நின்றன..
கிளைகளை விடாத மரங்கள்
வேரோடு சாய்ந்தன..
மனிதா உனக்கு 
எது புயல் ?
எது வேர் ?
எது கிளை?

I wrote a poem


I wrote a poem
About a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem
on what made the child to cry
No one cared to read.
Then again..
I wrote a poem
on how I cried watching a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem
on the tornado I felt watching a crying child
No one cared to read.
Then again..
I wrote a poem.
அவர்களின் கைகள் நீட்டியபடி  விரிந்திருக்கின்றன..
அவை குளிரில் உறைந்திருக்கின்றன
அவை  உங்கள்  அணைப்புக்காக காத்திருக்கிறேன்
வெப்பத்துக்கான உங்கள் தேவையையெல்லாம் முடித்து
மிச்சமிருப்பதை கொஞ்சமாய் அவர்களுக்கும்  கொடுங்கள்
உங்களுக்கான நேரத்தையெல்லாம் நீங்களே வைத்துக்கொண்டு
ஒருமுறை மூச்சுவிடும் வினாடி மட்டும் அவர்களை  அனைத்துக்கொள்ளுங்கள்
அவர்களின் கைகள்  குளிரில் உறைந்திருக்கின்றன
அன்பை பிச்சையிடுங்கள் 


சகா

திடீரென உங்கள் முன்
உடைந்து அழும் ரோஜாவை
என்ன செய்ய போகிறீர்கள்?
"ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு என்ன  ஆகப்போகிறது?
"நான் அப்பவே சொன்னேன்" என்று உங்கள்
துடிப்பற்ற மார்பை தட்டி என்ன ஆகப்போகிறது?
இப்படி செஞ்சு அப்படி சொல்லி என்று
ரோஜாவுக்கு யோசனை சொல்லித்தான் என்ன?
கொஞ்சமாய் குளிர்ந்த  நீர் தெளித்து
இதழ்கள் தடவி
"ம்ம்.." கொட்டியபடி அவள் சொல்வதை கேளுங்கள்..
பல நேரங்களில் ரோஜாக்கள் தேடுவது
ஒரு சகாவைத்தான்..
குத்தி கிழிக்கும் முட்களுடைய ரோஜாக்கள்
எப்படியும் எல்லாவற்றையும் கடந்துவிடும்..

உனக்கான அலை

கடற்கரையில் நின்று அலையை எதிர்பார்கிறாய்
அதுவே வந்து கால்களை நினைக்க எதிர்பார்கிறாய்
அது ஜில்லென்று உஷ்ணம் தணிக்க எதிர்பார்கிறாய்
இதோ.. ஒரு அலை கொஞ்சம் மேலெழுந்தபடி வருகிறது..
நுரை புரள புரள வருகிறது..
கால்களை நினைக்கிறது
அது ஜில்லென்று இருக்கிறது..
அதற்காக கொஞ்சம் சிரிக்கிறாய்
கடல் உனக்கு பிடித்து விடுகிறது..

கடலிடம் நீ காதலை எதிர்பார்ப்பதில்லை
கால் நனைத்த கடலை வீட்டிற்கு அழைப்பதில்லை
இன்னொருவர் கால் நினைக்காதபடி தடுப்பதில்லை
கடலை அடைய முற்படுவதில்லை

கடலை சுடிதார் போட வற்புறுத்துவதில்லை
புர்க்கா அணிய வற்புறுத்துவதில்லை
வேசியென்று ஏசுவதில்லை

நீ அங்கு இல்லாதபோதும்
கடல் அதன் அலைகளை வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
உனக்கான அலை என்று எதுவுமில்லை..
உங்கள் கட்டாயங்களின், எதிர்பார்ப்புகளின்
பிடுங்கல்களையெல்லாம் தாண்டி
எனக்குள்ளே ஒருவன் சிரித்துக்கொண்டிருக்கிறான்..

உனக்கு முத்தம் கொடுக்க தெரியாது

உனக்கு முத்தம் கொடுக்க தெரியாது
இதை நான் உன்னிடம் சொன்னதுமில்லை..
உன்னுடனான முத்தங்கள் இதழ்களினூடே முடிவதில்லை
முழு மூச்சையும் உள்ளிழுத்துகொள்கின்றன..

உனக்கு முன்புவரை,  கிடைத்த முத்தங்களைவிட
நான் கொடுத்த முத்தங்கள் அதிகம்..
உன்னுடனான முத்தங்கள்
நான் கொடுத்ததா? எனக்கு கிடைத்ததா?
எனக்கு தெரியவில்லை..
மென்மேகங்கள் உரசிக்கொள்வதைப்போல்
மிக இயல்பாக அது நடந்துவிடுகிறது

உனக்கு முன்புவரையிலான முத்தங்கள்
எனக்கு நியாபகமில்லை
உன்னுடைய ஒவ்வொரு முத்தமும் கூட 
அப்படித்தான் - எனக்கு நியாபகமில்லை
ஆனால் அதற்காக வருந்துகிறேன்

நீ மற்றவர் போல இல்லை
ஆனால் நான் அதை உன்னிடம் சொல்ல போவதுமில்லை
முத்தத்தில் நீ ஒரு வகை
அதில் தோய்ந்து துவண்டு புன்னகைக்கும்
நான் ஒரு வகை..





கனவென்பது ஒரு கலைப்படம் ..
புரிந்து புரியாமலும் 
பல கேள்விகளை எழுப்பி 
இன்னதென சொல்லமுடியாத சங்கடங்களை 
தாந்தோனியாக விதைத்து மறைகிறது.

எந்த ஒரு கனவும் முழுவதுமாக முடிவதில்லை..
பரணில் கிடைத்த புத்தகத்தை போல் 
கனவின் கடைசி பக்கங்கள் கிடைப்பதே இல்லை..



முதலில் ஆடை அவிழ்க்க  வேண்டும்
பின் வெட்கம் அவிழ்க்க வேண்டும்
பின் காமம் அவிழ்க்க வேண்டும்
பின் உண்மை பேச வேண்டும்
பின் மீண்டும் ஆடை அணியலாம்

நீ நாளை திரும்புகிறாய்

நீ நாளை திரும்புகிறாய்
மீன் தொட்டியில் புதிய நீர் மாற்றிவிட்டேன்
நம் படுக்கையின் உறையை மாற்றிவிட்டேன்
ஜன்னல் திரைசீலையின் முடிச்சை அவிழ்த்தாகிவிட்டது
நீ விரும்பும்படி காற்றில் அலைந்தபடி இருக்கின்றன
உன் செருப்புகளுக்கான  இடமும் சரி செய்துவிட்டேன்
கழுவிய பாத்திரங்களை மீண்டும் கழுவி வைத்தாகிவிட்டது
மீசை மட்டும் வைத்து சுத்தமாக மழித்தாகிவிட்டது
மீண்டும் தினமும் பால் பாக்கெட் சொல்லியாகிவிட்டது
"அம்மா திரும்பி வர்றாங்களா?" என்ற அவன் கேள்விக்கு
அசடு வழிய சிரித்தாகிவிட்டது
எல்லாம் முடிந்தது.
அமைதியாக விடைபெறும் இந்த தனிமையை
மென்சிரிப்புடன் வழியனுப்ப இந்த மாலை இருக்கிறது..

குகைக்கு வெளியே இரவுப் புலியின் கர்ஜனை
எண்ணை சொட்டும் தீப்பந்தம்
கடைசி குச்சி

பொறி

விடுவிக்க முடியாத பொறியொன்றில் என் கால்கள்
என் கைகளை பிடித்தபடி அவள்..
"பொறியை விடுவிக்க என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கிறாள் 
"யாராலும் முடியாது"
"உன் காலை வெட்டட்டுமா?"
"வேண்டாம். என் ஊணம் நம்மிருவரையும் துரத்தும்"
".."
"நீ போய்விடு"
"மாட்டேன்". அவளது  கைகள் இன்னும் அழுத்தி பிடிக்கின்றன.
"மிருகங்கள் வரலாம்"
"பரவாயில்லை"
"பசி உன்னை மாய்த்துவிடும்"
"பரவாயில்லை"
"இதுதான் என் முடிவு. நீ ஏன் இன்னுமிருக்கிறாய்?"
"உன் கடைசி மூச்சுவரை என் கைகள் வெப்பமளிக்கும்"
"பிறகு ?"
".."
"நீ தாராளமாக புதிதாய் தொடங்கலாம்"
"எதை ?"
"உன் வாழ்க்கையை !!"
"இந்த காதலை என்ன செய்ய?"
".."

பற்று

தடக்கும் மின்சார ரயில்
காலியான  ஞாயறு மதியம்
ஊசலாடும் கைப்பிடிகள்

I would disappear


Like the hunger artist
i disappear in hay
for all my dreams
i spent everyday
its true that i smiled
its true that i cried
its true that  i loved
and that i was loved
but still its true
Like the hunger artist
i would disappear one day

கடவுள்

தாசியின் யோனியினுள்
கிழியும் ஆணுறை
"விடுய்யா.. ஒன்னுமாகாது" என்றாள்..
"ஹ்ம்ம்..நம்ம யாருக்கு கெடுதல் செஞ்சோம்" என்றான்..
நேசமாய் சிரித்துகொண்டனர்


விளம்பரப்பக்கத்தைபோல்
சிதறியிருந்தன எண்ணங்கள்
நடு நெஞ்சில் ஒரு கருங்கல் பாரம்
அவர் எண்ணை அருகில் அழைத்தார்
மூச்சுவிடும் நேரத்தில்
ஒரு இறகு தரைதொடும் நேரத்தில்
ஒரு குழந்தை சிரித்துவிடும் நேரத்தில்
ஒரு டால்பின் எழும்பி குதிக்கும் நேரத்தில்
அவர் ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்
'சரி' என்று..
காலம் காலமாக வருத்தும் நோயை
நொடிகளில் விரட்டும் வார்த்தைகள்.
எதற்காக அவர் அப்படி  சொல்ல வேண்டும்?
தெரியவில்லை..
எல்லோரிடமும் அவை இருப்பதும் இல்லை..



i cant complain.
this is the best anyone can get..
i respect that freedom..
OMG.. am the special one..
but not yet.. not yet..
freedom just gave me wings..
am trying to fly...
i have to know how to make it a majestic flight
I have to create my path..
OMG.. am the special one.

புற்றுனோய் மனிதன்

என் நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்துவிட்டன
எல்லாம் மிதப்பதுபோல்தான் இருக்கிறது
எதுவும் பெரிய விஷயமில்லை

நான் சொல்வதில் உங்களுக்கு விருப்பமில்லை
ஒரு ஊருக்கு முன்னால் என் தனிக்குரல்
நான் அமைதியானதுகூட உங்களுக்கு தெரியவில்லை

இப்படித்தான் உருவாகுமோ
கோடிசெல்களில் திடீரென
புற்றுனோய் மனிதன்

நாள்

இந்த நாளில் எதுவும் நடக்கவில்லை
எப்படியாவது ஒரு நிகழ்வை நிகழ்த்திவிட
ஒரு துரும்பையேனும் நகர்த்தி விட
முயன்று வெறுத்து வெட்க்கி இருக்கும் என் முன்
அது சலனமில்லாமல் கடந்து சென்று விட்டது

நாள் என்பதுதான் என்ன..
ஒன்றுமே நிகழாத
என் இருப்பை சற்றும் சட்டை செய்யாத
ஒரு நாளினை வைத்து
நான் என்ன செய்யப்போகிறேன்

எதற்காக இப்படி ஒரு நாள் என்னை கடக்கிறது ?

பெண் குரல்

நீ கொடுக்கும் உரிமையும் வேண்டாம்
நீ பிடுங்கிடும் உரிமையும் வேண்டாம்
சம பங்கென நாடகம் வேண்டாம்
போதும் போதுமுன் கரிசனம்

நானும் உன்னை  கடக்கிறேன்
என் கடைக்கண்ணால் உன்னை  அளக்கிறேன்
உன் சிருஷ்டி நீளம் அரிந்ததுபோல்
ஏளனமாய் கொஞ்சம் சிரிக்கிறேன் - இது எப்படி?

எனக்காக உன் இருக்கையை விட்டு தராதே
என் அருகில் அமரவும் தயங்காதே
நாமிருவரும் ஒரு இருக்கையில் அமரலாம்
அவ்வளவு மட்டும் நடக்கட்டும்

Just leave me alone இல்லை
please let me live இல்லை
why do you care..tell me..
why do you care?




ஒரு மண் புழுவைப்போல் மிக மெதுவாக
காலம் என்னுள் குழைந்து குழைந்து
என்னை நகர்த்தி கொண்டிருக்கிறது

ஈரம்

சிறிய எறும்புக்குள்ளும் ஈரம்
நசுக்கும்போது பிசுபிசுக்கிறது.
எரிந்து முடிந்த குடிசையில் 
வேறொன்றும் இல்லை 
கரிய கூட்டில்  சாம்பல் மிச்சம்
புயலில்லை அடைமழையில்லை 
வாசல் வேம்பு சலசலக்கும் தென்றலுக்கே 
உதிர்ந்துவிட்டது எல்லாம்..
#1: செம mood ஆயிடுச்சு.. அவள இழுத்து ஒரு lip to lip அடிக்கனும்னு தோணிச்சு..
#2: அவளை ஸ்பரிசிக்க உள்ளம் துடித்தது.. அவசரமில்லாமல் அவளது கண்ணம் தடவி இதழ்கள் உரசி  ஒரு முத்தமாவது தந்தே ஆகவேண்டும்..


எனக்கு  பிடிக்கும் இசை ஏன் உங்களுக்கு பிடிப்பதில்லை?
உங்களின் வலியை நான் உணராமல் இருப்பதைப்போலதானோ
~~
எங்கள் கதைகள் உங்களுக்கு பிடிப்பதில்லை
நல்லது.. ஆனால் அவையும் சொல்லப்படவேண்டிய கதைகள்தாம்
நீங்கள் கதையாகவாவது கேளுங்கள்
எங்கள் வாழ்கையின் சில பக்கங்களை..
BTW
உங்கள் கதையில் என்ன நடந்துவிட்டதென்று
அப்படி அழுகிறீர்கள்?
என் ஜன்னலிலிருந்து குதிக்கும் புறா
பற்றிக்கொள்ள எதுவிமில்லாத
தாங்கிபிடிக்க தடமில்லாத
மேடு பள்ளமென்றில்லாத
காற்று வெளியில் 
அந்த பயணத்திற்க்கான வழியை
போக போக அமைத்து..
எனக்கு பொறாமைதான்..


முத்தம்

மோகம் தலைக்கேறி முட்டித்தள்ளும்..
அடுத்தநொடி அவள் முலையில் பற்கள் பாயும்
கிழிந்த ஆடைக்கு கோபம் உதித்து
என் உஷ்ண பூச்சில் மோகமாய் மாறும்
விடைத்த விரல்கள் தளர்ந்து நடுங்கும்
தாமே வந்து என் தலையை கோதும்
பேரின்பமெல்லாம் பெருமூச்சாய் இழுத்து
அவள் உடல்முழுதும் படர்ந்தெழும்பும்
சிலநொடி சூன்யமாகும் எல்லாம்
மூடிய விழியில் அசையாது நிற்கும்
நேற்றைய உச்சத்தில் கூடுபிரிந்த காமஉயிர்
அத்தருணம் உட்புகும்
கோதும் கைகள் கற்றை முடிபிடித்து
விரட்டென எனை இழுத்து
விழி வழி ஆழத்தில் ஓர் வெறி பரப்பும்
இரு உடல்களும் இதழ்வழியே விழுங்க பாய்ந்து
ஒரு இடிமுத்தம் அரங்கேறும்...

பரணில் கிடந்த வெள்ளை காகிதம்
பிரித்துப்பார்த்தேன்
பழைய வெள்ளை
துளிர்த்து வளர்ந்து பழுத்து
உதிர்ந்து உருமாறி சருகாகி
பொடித்து மண்ணாகும்
எது?
 எல்லாம்.
வெளிச்சத்தை கடக்கும் புகை
தன்னிருப்பை தெரிவித்து சுழன்றது
யாரும் சீண்டாத அந்த பாதையை அறிவித்ததற்கு
கொஞ்சமாய் மின்னியது விளக்கு..

மூன்று வரிக்கவிதை
முடிவில்லா ஆகாயம்
ஹைக்கூ

சிந்தனையற்ற கருமை

விளக்கில்லாத அமானுஷ்ய வெளியில் நின்று
இரவை வெறிக்கிறேன்
எங்கிலும் சிந்தனையற்ற கருமை 
கருந்துணியில் கண்கட்டியதுபோல் இருந்தது.
சிந்தனையற்ற கருமயில்  ஒரு பொட்டு
பொட்டு பொட்டாய் ஒளியின் அடையாளங்கள்..
காத்திருக்க காத்திருக்க
அதிகரிக்கின்றன நட்சத்திரங்கள்..
மின்னிக்கொண்டு சென்ற விமானம்
கலைத்தது இக்கவிதையை.. 

களிமண்

என்னை களிமண் என்று நீங்கள் சொல்வதை
நான் ஒத்துக்கொள்கிறேன்...
நீங்களாகவே முடிவெடுத்து  என்னை ஒரு பொம்மையாக்குகிறீர்கள்..
ஒரு  முக்கிய புள்ளியின் கொலுவில் 200ல் ஒன்றாக நான்..
எனக்கிது  வேண்டாம்..
நான் பானையாகிறேன்..
ஆயிரம் பிறை கண்ட அந்த ஏழை கிழவியின்
குடிலில் தண்ணீர் சுமப்பேன்..
பல கதைகள் கிடைக்கும்.. தாகம் தீர்ப்பேன்..
வாரம்  ஒருமுறை வரும்  அவள் பேத்தியின்
இடுப்பில்அமர்ந்து வளையோசை கேட்பேன்..
அண்டை  வீட்டாரின் கைப்பிள்ளையாவேன்..
அவளின் இறுதி ஊர்வலத்தில் வெட்டுண்டு உடைந்தாலும்
ஒரு வாழ்வு இருக்கும் எனக்கு..
கரப்பான்கள் ஊரும் பரண்பெட்டியில்
வருடமெல்லாம் மூச்சடைத்து
ஒன்பது  நாளைக்கு மட்டும்
ஆண்டவனாக மாற
நான்  ஆளில்லை..
விட்டுவிடுங்கள்..
முதல் வரியை தருவதுபோல் தந்துவிட்டு
முழு கவிதையையும் உள்ளிழுத்துக்கொல்கிறது
கடல்..
எத்தனை வரிகள் தந்தாலும்
முடியாது நம் பக்கம்..
அத்தனையும் சிதறி சிதைந்தாலும்
தொலையாது நம் சொர்க்கம்..
துருவம்  சென்று மறைந்தாலும்
மறக்காது முதல் முத்தம் ..
அரவம் அற்று  கிடந்தாலும்
உயிர்நாதம் உன் பெயராகும்..
பிறவற்று போகவிடு  - இறைவனே
இது போதும்..

பிரபஞ்சத்திலிருந்து ஒரு குழல் வழியே
எனக்குள் வரும் வரிகள்...
எனக்குள் எல்லாம்
என்னிலிருந்து எல்லாம்..

தன்னை விளக்க
வார்த்தைகள் தேவைப்படும்போது 
வெட்கப்படுகிறது அன்பு ..
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பேரன்பை சொல்லிவிட எத்தனித்து
நித்தம் எழுதும் கவிதைகள் பத்தவில்லை..
முழு அன்பை நீ உணரும் நாளில்
நம்மிடையே மொழி அழியலாம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தற்கொலையிலிருந்து பின்வாங்கியவன்

இதயத்தின் கடைசி எண்ணங்களை
கவிதையாக்கி பார்த்தவனுக்கு
வாழ்க்கை பிடித்துவிட்டது..
வார்த்தைகளால் கட்டிக்கொள்ளலாம்..
விடுவிப்பது எப்படி..
கனவுகளை அரங்கேற்றலாம்
நினைவுகளை எப்படி..
மனிதனை சிறைவைக்கலாம்
மனதை எப்படி..
உண்மையென நம்பவைக்கலாம்
உண்மையாய் எப்படி...

ஏதோ ஒரு சொல்லுக்காக துடித்துக்கொண்டிருக்கிறது இன்னொரு சொல்..

ஏக்கத்தின் முழு வடிவம் உன் வயதாக இருக்கலாம்..

கன நேரத்து பார்வையில்தான் எத்தனை கணம்..

ஒரு பொய் கோபத்திலும் ஒரு பொய் மன்னிப்பிலும்
நிஜமான் சந்தோஷம்...
படிப்பார் அற்ற எழுத்து
உழன்றுகொண்டே இருக்கிறது
எல்லோர் மனதிலும்..

யாருக்கென்று தெரியாமல் வரும் கவிதை
இருந்துவிட்டு போகட்டும் 
அற்பத்தின் விதிவிலக்காய்..
உடைந்து விழுந்த வானம் கடலில் ஒரு தீவானது..
அதன் மேகம் பயிரானது..
அதற்க்கான துண்டு நிலா ஒரு பெண் ஆனது..
சேர்ந்து உடையாத சூரியனை அவள் திட்டிக்கொண்டிருந்தாள்..

வேட்டையின்போது தவறிய அம்பொன்று
இன்னும் குத்தி நின்றுகொண்டிருக்கிறது...
கொடிபடர்ந்த அம்பின்மேல் அமர்ந்தது  குருவி
எச்சமிட்டு அம்பின் பாவம் கழுவியது..
நீ என்றாவது ஒரு நாள் கடலை நேசிப்பாய்.
அன்று என் மௌனம் புரியும்..
அதுவரை நானொரு சலசலக்கும் அலை மட்டுமே..
ஆதாம்-ஏவாளுக்கு இடையே 
ஏதோ ஒன்று இருந்திருக்கும்.
அது காதலாகவும் இருக்கலாம்..
உள்ளே  உடையும் வலியை
வெளியில் நின்று  சலனமில்லாமல் 
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்..
பல மாதங்கள் காத்திருந்து காதல் சொன்ன நீ 
என் அறையை சென்றடையும் நேரம் கூட பொருக்க முடியவில்லை..
கூட்டமில்லாத பேருந்தில் ஏதோ அழுந்துகிறது என்னுள்...

கனவின் கூட்டில் ஒரு மாயை 
பாவங்களின் முதலும் முடிவும் அது..

சொல்லின் இறுதியில் உதிரும் மௌனம் 
என்றாவது இன்னொரு சொல் அதனை நிரப்பும்..

உறவின் ரகசிய ஆட்கொள்ளல் 
அதை கொள்ளாமல் இருப்பது இயலாமை..

உந்தன் நிழலோ 
அதன் வடிவோ 
என் செருக்கை கொன்றிடும் 
தழலோ...

வியர்க்கும் நெற்றியோ 
துடைக்கும் அழகோ
கலையும்  பொட்டோ
தொலையும் நானோ..

உன் முரணோ 
என் அதிர்வோ 
சற்றும் எதிர்பாராத புதுப்புது
நீயோ..

உன் பிரிவோ
மகிழ் கனவோ 
வெட்கித்து எழும் 
இரவோ..

இத்தனை நாள்
எப்படி தவற விட்டேன்..
கண்முன்னே சிதறிக்கிடக்கிற கவிதைகளை..

பொறுக்க தோன்றவில்லை.
அழகான குவியலது.
சில செருப்படிகளும் அடக்கம்.

திரும்பி விழுந்த ஒற்றை சருகு 
விரிக்கிறது 
எறும்புக்கான வானத்தை..

குவியலில் எனக்கு தெரிந்ததில் ஒன்று.
உங்களுக்கு தெரியாவிடி வெளி நோக்குங்கள்.
அது வெற்று வெளியல்ல..
அழகின் புதிய வரையறை நீயாகியதால்
எழுதப்படாத சிறந்த தேவதை கவிதை
என்னுள் மட்டுமே இருக்கிறது..


வெட்டிய பார்வைக்கே - ஒரு நொடி 
விட்டுத்துடித்தது இதயம்..
கூறிய கதைகளிலே - மனதில் 
ஊறிய  உன் அபிநயம்..
சட்டென விலகியதால் - உதடுகளில் 
வெட்டப்பட்ட முதல் முத்தம்..
மழை மாலை அணைப்புகளில் - தேநீருடன
அலைபாய்ந்த தருணம்..
ருதுவாகிய பொழுதில் - நீ சிவந்த
ரகசிய கற்பனைகள்...
நீயில்லாத வெறுக்கப்பட்ட கனவுகள்..
விடைபெற அணைத்தபோது - விலகாமல் நின்ற 
மௌன நிமிடங்கள்..
எத்தனை ஞாபகங்களோ - அத்தனையும் 
பித்தனின் பாசுரங்களோ...
ஏரியின் கரையில் எதோ ஒரு  ஓடையின் நீர்
அதில் மிதப்பது எதோ ஒரு  மரத்தின் இலை
காற்றில் மிதந்து இலையில் அமர்வது எதோ பறவையின் இறகு
இதில் யாருக்கு சொந்தம் எனதிந்த மென் புன்னகை..
மூடிய விழிகளுடன் அவன் மரணித்த பின்
விழியோரத் துளியாய் வழிகிறது
மிச்சமிருந்த வாழ்க்கை..
என் கொடூர கனவொன்றை 
நீ பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்..
ரத்தம் சிந்தி நான் இறக்கும் தருணத்தில்
திடுக்கிட்டு எழுந்தேன்..
கண்களில் நீர் வடிய, என்னை எழுப்பாமல்
அழுகவும் அணைக்கவும் முற்பட்டுக்கொண்டிருந்தாய்..
என் வியர்வையை துடைத்த உன் கைகளின் நடுக்கதிதில்
ஞாபகம் வந்தது மிச்சமிருந்த கனவு..

துளியின் சுமை..

ஒரு பிரிவின் துயரத்தை -
அழுது தீர்ப்பவன் புத்திசாலி..
அல்லாது - நாட்கள் கழித்து
ஒரு சிறு துரும்பினால் ஞாபகப்படுத்தப்பட்டு
பெருகும் ஒரு துளி
கண்ணீரின் சுமை -
முட்டாள்களின் சூத்திரம்..

முரண்..

ஏதோ ஒரு கருத்தில் முரண்பட்டு
கணத்த வார்த்தைகளை பரிமாறிக்கொண்டோம்..
பின்வந்த நீண்ட நிசப்தத்தை உடைக்க
கணத்த முத்தங்களை பரிமாறிக்கொண்டோம்..
உயிர் எரிந்து  உடல் உவந்து
நம்மிடையே நம்மை பரிமாறிக்கொண்டோம்..


காலையில் கவனமாய் பொறுக்கிக்கொள்ளவேண்டும்..
சிதறி கிடக்கின்ற  ஆடைகளையும், முரண்பாடுகளையும்..
உனக்கான என் காதலை நான் எழுதியதும் இல்லை...
எழுதப்போவதுமில்லை...
என் கிழவனும் கிழவியும் பரிமாறாமல் வைத்து
வாழ்ந்து முடித்த காதல் போல்..
என் மூச்சுக்காற்றின் வழியே
காற்றில்  கசிந்துகொண்டிருக்கிறது காதல்..
ஒரு நாள் அதுவும் நின்று போகும்..
என் கல்லறையின் மீது பூக்கும் பூவை சுவைக்கும்
தேனிக்கு தெரியும்
உன்சுவை..
மரணத்தை எதிர்னோக்கி வாழ்பவனுக்கு
மரணித்துக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை...

நான்..

உங்களனைவரிடமும் ஒட்டியிருந்த சிறுசிறு என்னை பிய்த்தெடுத்துக்கொண்டேன்..
என்னிடமிருந்த சிறிய உங்களை  வெளியே எறிந்துவிட்டேன்..
நான் என்னால் மட்டுமே ஆனவன்..
பின் தெரிந்தது..
யாருமில்லாத நான் நானில்லை..
என்னிலிருக்கும் நான் மட்டுமே நானுமில்லை..

ஒன்றானவன்..

முட்டிக்கொண்ட மேகங்கள் இல்லாமல் போயின..
மின்னல்களால் வெட்டப்பட்டாலும் -
அப்படியே இருக்கிறது வானம்..
மழை கவிதைகள் ரசிக்க மட்டுமன்று..
சற்று நனையவும் தான்; அதுபோலவே
குழந்தை கவிதைகளும், கடவுள் கவிதைகளும்..
ஒரு துக்க நாளில் பெய்த அடைமழையை  நினைத்து
நான் அழுதுகொண்டிருக்கிறேன்..
இறப்பில் ஏதேனும் அந்தரங்கம் உண்டாயின்
அதை அறிவித்தபடி அது பெய்தது..
அதையறிந்த ஒரே உயிர் நானாகிப்போனேன்...
மன்னிப்பையோ கண்ணீரையோ புரிந்துகொள்ள யாருமில்லை.
அந்த கடைசி ஊர்வளத்தில் நனைந்துகொண்டே
நான்  மழையிடம் அதை முணுமுணுத்தேன்..
அடைமழை தனிந்து ஊசி மழை  என்னை குத்தித்தீர்த்து..
பின் வந்த பேரிடியில் பயந்து விழுந்தேன்..
கரைந்துகொண்டிருந்தன பாவங்கள்..

ஒட்டுப்பசை

தேம்பி தேம்பி அழுதுகொண்டிருப்பவள்
யாரென்று தெரியவில்லை..
கைத்தொலைபேசியில் யாரிடமோ மன்றாடியபடி
அந்த ரயில் நிலையத்தையே  இரக்கப்பட வைக்கிறது அவள் குரல்..
கண்ணின் மை கரைந்து தீர்ந்து
கண்ணீரும் தீர்ந்துவிடும்  போல்...
விக்கித்து தேம்புகிறது அவளின் ஆற்றாமையும் காதலும்..
அன்றைய இரவில் அவள் உடைந்திருப்பாள்..
அவளின் அறையின் சுவர்களில் எழுதாத குறிப்புகளை
அழிக்க முற்பட்டு தோற்றுப்போய்
நினைவுகளால் வரும்சிறு புன்னகையை மோக்ஷம் கண்டு
பின் துளிர்க்கும் கண்ணீரின் தூய்மையில் பொதிந்திருக்கிறது..
அவளுக்கான ஒட்டுப்பசை..

கருப்பு புகைப்படம்..

ஒரு கருப்பு இரவின் வானத்தை
புகைப்படம்மாக எடுத்து என்னிடம் தருகிறாய்..
புரியாமல் விழிக்கும் என்னைபார்த்து
அதன் அர்த்தம் விளக்க ஆயிரம் சொற்கள் பேசுகிறாய்..
அந்த கதைகளில் கருப்பும் இரவும் நீயும்
வந்து வந்து போகிறீர்கள்..
ரசிக்க தொடங்கிய கணத்தில் நானும் சேர்ந்துகொண்டேன்...
நீ என்னை அதில் வழிநடத்தி செல்கிறாய்..
ஸ்பரிசமும் சொற்களும்  நம்பிக்கையும் நிறைந்த
கருப்பு வெளி அது..
மகிழ் தருணத்தில் உனக்கு சிகப்பு ரோஜாக்களை பரிசளிப்பதுபோல்
இப்பொழுதும் தர எண்ணினேன்...
சிகப்பு ரோஜாக்களை நினைத்தவுடன்
அந்த கதைகளிலிருந்து நான் வெளியே விழுந்துவிட்டேன்..
பலமாய் சிரித்த நீ சொல்கிறாய்
கண்களை மறந்த தியானமே அந்த புகைப்படமென்று..

புகைப்படம்..

பனி சூழ்ந்த மலைமுகட்டின் காட்சியை
ரசித்து ரசித்து கடந்த நொடிகளை..
நான் நினைத்து மகிழவே அந்த புகைப்படம்..
அன்றி..
உங்களுக்கு அது  எவ்வளவு அழகாக தெரிந்தாலும்
அது பிரம்மையே...

கடவுளின் பின்குறிப்பு..

நாமிருவரும் பகை கொண்டோம்..
உன்னை அழிக்க என் கடவுளிடம் வேண்டினேன்..
என்னை அழிக்க நீ உன் கடவுளிடம்..
எதுவும் நடக்கவில்லை...
நம்மிடமிருந்து விலகினர் கடவுள்கள்..
தனிமையாலும் காலத்தின் பேயறைகளாலும்
ஒன்று சேர்ந்தோம்..
திரும்பி வந்தனர் கடவுள்கள்..
மீண்டும் பகை கொண்டு வேண்டினோம்..
மீண்டும் விலகினர் கடுவுள்கள் - சிறிய பின்குருப்புடன்..
"எங்களை புரிந்துகொண்டால் நாங்கள் உங்களுக்கு தேவையில்லை"

இருபத்தி மூன்று நிலாக்களும், சில நட்சத்திரங்களும்

உச்சிவெயிலில்
சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில்
அலட்சிமாய் ஆகாயம் பார்த்தபடி அவன்..

விரல்களால் தொட்டு தொட்டு நிலாக்களை எண்ணிக்கொண்டிருந்தான்..
இருபத்தி மூன்று நிலாக்களும், சில நட்சத்திரங்களும்  உள்ளதாக சொன்னான்..
சூரியனில்லாத அவன் வானம் குளிர்ந்திருந்தது..
நாளையும் வந்தால் சில மழை மேகங்களை பொம்மையாக்கும் ரகசியத்தை சொல்வதாய் சொன்னான்..
அப்பொழுது தான் தோன்றிற்று,,
எனக்கென ஒரு வானமில்லையென்று

ஆயுள் போதாதெனக்கு,,

கைக்குட்டையை விட்டுச்சென்றதுபோல்
அலட்சியத்துடன்  விட்டுச்சென்றுவிட்டாய் உன் குரலை..
உயிரை இழைத்து இழைத்து காதலாக்கும்
அந்த குரல் - எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது..
குரலுக்கான கண்களை சுழன்று சுழன்று வரைந்துகொண்டிருக்கிறது காற்று..
அந்த கண்களின் வழியே அண்டத்தின் அன்பனைத்தையும்
அனுபவிக்க எத்தனிக்கிறேன்..
ஆயுள் போதாதெனக்கு,,

கூடல்

கருத்து திரண்டிருக்கிறது வானம்.. அனைத்தையும் உள்ளடக்கி..
துளித்து துளித்து தீண்டிக்கொண்டிருன்தது மழை..
மழையை எதிர்பார்த்தபடி அவன்..
நீண்ட தூறல் கணங்களால் ஏக்கம் மேலிட்டது அவனுக்கு..
குடைமடித்து தன் ஆவல் தெரிவித்தான்..
கை நீட்டி தீண்ட எத்தனித்தான்..
தூறல்.. தூறல்..

மேகங்களை இழுத்தனைக்க ஆசை கொண்டான்..
மேல்நோக்கி முகம் காட்ட..
உதடுகளில் துளிகள்..
முத்தங்களில் ஆரம்பித்து மொத்தமாய் அடைமழை...
கைகளை விரித்தவனை முழுவதுமாய் நனைத்தபடி..
அணைத்தபடி..
பெய்தலின் உச்சத்தில்..
எல்லோரும் பாத்தும்
யாருக்கும் தெரியாமல்..
நடந்து முடிந்தது
ஒரு கூடல்..

புகை

நீ
புகைத்து  விடுவதையும்..
புகைக்காத இடைவேளியிளிலும்..
புகைக்கிறது
காற்று..

:)

தொடர்ந்து பிரிதலும்
பிரிந்தும் தொடர்தலும்
காதல்..

கடவுள்களுடனான நேரங்கள்

பயமோ  வெட்கமோ - தன் தாயின் கால்களின் இடுக்கில்
முகம் புதைக்கிறது குழந்தை..யாரும் பார்த்திராத அழகு
இப்படிதான் மறைக்கப்படுகிறது..

பூச்செடி நட குழிதோண்டி
நடாமல் காத்துக்கொண்டிருக்கிறாள் -
மண்புழு கடக்க வேண்டி..

குப்பைத்தொட்டியில் கிடந்த கரடி பொம்மைக்கு
விக்கலெடுத்துக்கொண்டிருந்தது..
அந்த பக்கமாக போன ஏதோ ஒரு குழந்தை
அதை நினைத்துக்கொண்டிருக்கலாம்.

விக்கித்து அழும் குழந்தை
உடனே அழுகையை நிறுத்துகிறது -
அதன் விரலை சப்பக்கொடுத்தவுடன்..

(இன்னும் வரும்..)

அவர்களின் பிரிவு...

கவிதை எழுத எத்தனித்தான்
எதுவும் தோன்றவில்லை
அவனும் எழுதவில்லை..

அவளுடன் கழித்த மாலையை
கவிதையாக்க இயலாதது முரண்..
ஆனால் கவிதையாக இல்லை - அம்மாலை..

பசைவிட்டு போனார்ப்போல் இருந்தது..
வறண்டு நகராமல் போய்க்கொண்டிருந்தது  நேரம்...
தொலைந்தே போயிருந்தது புரிதல்..

எதேர்ச்சயாய் ஏற்பட்ட வேண்டா சந்திப்பைபோல்
'வேறென்ன? வேறென்ன ?' மாறி மாறி ஒலிக்க..
வேறொன்றுமில்லை என்பதை உணர்த்திக்கொண்டிருந்ததன..

அந்த சந்திப்பே நிகழாத மாதிரி இருந்தது இவனுக்கு..
அவளே இல்லாமல் போயிருந்தாள்...
முன்னாட்களின் கவிதையனைத்தும்
அற்ப்பமாய்  தெரிந்தன..

அவளும் அதற்குபின் அழைக்கவே இல்லை..
சொல்லிக்கொள்ளவே இல்லை இருவரும்..
புரிதலின் உச்சமாய் - அவர்களின் பிரிவு...

எப்படி?

ஹனுமனும் சாபம் பெற்றவனே
ராவணனும் வரம் பெற்றவனே
எப்படித்தான் தெரிந்துகொள்வது
யார் கடவுளென்று?

பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

எனக்கும் உனக்கும் உள்ள நேரம்
மூன்றே நிறுத்தங்கள்..
இடைவெளியாய் சில கம்பிகள்..
கைமாறிய சில்லறைகளில் என்  ஸ்பரிசங்கள்..
திரும்பிய பயனசீட்டுகளில் உன் வெட்கங்கள்..

நான் ஏறும்பொழுதில் உன் ஓரக்கண் பார்வை..
பூக்கடை நிறுத்தத்தில் மலர்ந்து விடைகொடுப்பாய்..
அந்த ஒரு நாளில் ஒரு நிறுத்தம் முன்னதாக ஏறி
காதலை சொன்னேன்..
ஒரு நிறுத்தம் தள்ளி இறங்கி
சம்மதம் சொன்னாய்..

நீ ஓயாமல் பேசிய பெண்மணி
என் மதனி என்று ஜாடை காட்ட - உன் நாணத்தில் உடைந்தது
நம் குட்டு..
இன்று ஒரே நிறுத்தத்தில் ஏறும் நாம்
புதிதாய் விடப்பட்டிருக்கும் PP வண்டியில் செல்லாது
நம்  பேருந்திலேயே தொடர்கிறோம்..
அப்படியே இருக்கின்றன
பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

கதை... கவிதை...காவியம்..

ஒவ்வொரு துளியும் ஒரு கவிதை
நதியின் பாதையில் பல சிறுகதைகள்
முடியாத காவியமாய் கடல்..

ஒவ்வொரு பூவும் ஒரு கவிதையாயின்
எழுதப்படாதவை எத்தனை மரங்களின் கதைகள்...?

ஒவ்வொரு பார்வையும் ஒரு கவிதயாயின்
எத்தனைகோடி சிறுகதைகள் நிமிடங்களில்?
உலகமென்னும் காவியத்தை
இயக்கும் சக்தி எதுவாக இருக்கும்?
கடவுளேன்பார்,  அன்பென்பார் - நான் சத்தியமென்கிறேன் ..

மழையின் அடையாளங்கள்...

மழை மட்டும் பேசிக்கொண்டிருந்த பின்னரவில்..
தூரத்து தெரு விளக்கு நீள்கோடாய் விழுகிறது சாலையின்  மேல்..
அதை  சலனத்துடன் ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது
மழை..

அவசரமாய் நிழல் குடையில் ஒதுங்கியவன்
மழையை திட்டி ஓய்ந்து போனான்...
கைகள் நீட்டி, தூறல் ரசித்து, முகம் கழுவி
திடீரென  இறங்கி நடக்க ஆரம்பித்தான் - அழகாக..

பத்து நிமிடங்களில் நின்று விட்டது மழை -
அடையாளமாய் -
மண் வாசனை..

சாலை குழிகளில் தேங்கினிர்க்கிறது மழைநீர்..
ஒவ்வொரு குழியாய் சென்று கால் நனைக்கும் சிறுமி - கைபிடித்து
இழுத்து செல்கிறாள் அப்பாவையும்..
இதில் யாரழகு ?

நனைய நினைத்தும் முடியாமல் போகிறவர்கள்
மழையை ஸ்பரிசிக்கிரார்கள்
குடை பிடித்துக்கொண்டே ஒரு கை நீட்டி

மழையை தவறவிட்டவர்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடுகிறது
நடைபாதை மரமும்
சிலுப்பிவிட தென்றலும்..

ரகசியம்...

நண்பனிடத்தில் சொல்லும் ரகசியம்
ரகசியமாகவே புதைகிறது..
நண்பனிடமும்  சொல்ல முடியாத ரகசியம்
பாவமாக புதைகிறது..

உள்நாட்டு ரகசியம் 
ஊர் ரகசியம்
தெரு ரகசியம்
வீட்டு ரகசியம்
என்ற பெயரில் சமூகத்தின் அடுக்குகளில்
பாவ மூட்டைகள் பரவி கிடக்கின்றன..
 
ரகசியம் பரிமாறிக்கொள்ளும் கூட்டத்தில்
எல்லோரும் வருகிறார்கள்
முகமூடி அணிந்து...

வெளி

பரந்து விரிந்த புல்வெளியில்
பார்ப்பதெல்லாம் இலக்கு..
 கடப்பதெல்லாம் பாதை..
இலக்கை அடைந்து திரும்பி பார்த்தல்
கடந்த இலக்கின் அடையாளமில்லை.
சுவாசிப்பதை மட்டுமே உணரும் நொடியில்
வேறொன்றும் தோன்றவில்லை..
எல்லைகள் இல்லாத அந்த வெளியில்
காலமும் இல்லை !!

காதலனாவது எப்படி?

அவளது குறுஞ்செய்தியை, மின்னஞ்சலை எதிர்பார்த்திருப்பாய் - தவறில்லை
ஆனால் அதை அவளிடம் சொல்லி விடாதே..

எல்லாவற்றையும் சொல்லி விடாதே - நண்பனாகிவிடுவாய்!
இல்லாத ரகசியத்தை புன்னகையில் மறைக்கும் பாவனை கற்றுக்கொள்.

உங்களுக்காக கடந்து செல்லும் நொடிகளை கவனி - அப்போது
கண்மொழி பேசு - உடல்மொழி தவிர்.

அவள் கேட்கும் வரை காத்திரு - அவளைப்பற்றியும் காதலைப்பற்றியும்
உன் புரிதலை சொல்ல..

அவளாக கேட்பாளென காத்திருக்காதே - பரிசுகளுக்கும்
முத்தங்களுக்கும்..

எது வேண்டுமுனக்கு?

மனிதனை காதலும் பொருளும் இயங்க வைக்கின்றன..
பொருளின்மேல் காதலாயின் தொலைப்பது மனிதம்..
காதல் மட்டுமாயின் கிடைப்பது வாழ்க்கையின் பொருள்..

இன்னும்....

எல்லா மொழிகளும் வர்ணித்து
வார்த்தைகள் தீர்ந்த பின்பும்
இன்னும் மிச்சமிருக்கிறது காதல்...

தலைமுறைகள் அழுது தீர்த்தும்
இன்னும் ஆழ்மனதில் புதைந்திருக்கிறது
இன வெறியின் சோகம்..



உணர்ச்சிகளால் பந்தாடப்படும் மனம்
மரணத்தின் விளிம்பில் கேட்கிறது
இன்னும் ஒரு வினாடி வாழ்க்கை..

தனிமை

செய்வதற்கு எதுவுமில்லாமல் போய்க்கொண்டிருக்கறது முன்னிரவு..
புதைமணலாய் சூழ்ந்திருக்கிறது நிசப்தம்..
நொடிகளாய் உருமாறுகிறது தனிமையின் மூர்க்கம்..
உறவாட ஜன்னலை திறக்கிறேன்...
கைவிடவில்லை இயற்க்கை...

மனிதம்-காதல்

மனிதத்தின் தொடக்கமே காதல்..
எல்லைகளில்லா காதலே மனிதம்..

Divine music

It was post 10'o clock at night when I left office. I was awaiting a cab to pick me up. It was a traditional taxi I see on roads - black Lincon. When I entered, a sad melody tone of a lady was being played. Then cab driver switched it off after 5 sec.. I was disappointed. After 20 sec, when the car stopped at a signal, I requested to switch it on. Then started the same tone, with light blend of percussion in BG(that was similar to Indian Tabla ) .
"Did you understand the song?"
"Ofcourse not.. let me guess.."
"??..."
"this lady is crying for a love who left her"
"something close... she is actually blaming him"
my mind voice - why is blaming him in such a sweer soothing tune??
"What does this lines mean - you can tell me the best lines"

"Sure, I can tell that -
you mad me cry by showing your love: its a hell
i hid all my tears and made you smile: thats my love
why then you left me?

i have one more reason to cry
but no one to love..

why you left me?"

I was dumpstuck on hearing that....
Some things are common across the world - people falling in love, people who don't understand love for say. But how come music? Given my background of just-another-music lover and the fact that I am able to get the hinch of the song by hearing the tune, music is amazing. It increases my interest on music and the very divinity associated with music.